admin

வாழ்வின் அர்த்தம்.

மீ. சித்ரா ராஜம் புத்தகம்   : முறிந்த பாலம்  ஆசிரியர் : தோர்ன்டன் ஒயில்டெர் தமிழாக்கம் : ரா.நடராசன் பதிப்பகம் : தேசாந்திரி பதிப்பகம் பக்கங்கள் : 144 தோர்ன்டன் வைல்டரின் காலத்தை விஞ்சிய செவ்வியல் படைப்பான, “தி பிரிட்ஜ் ஆஃப் சான் லூயிஸ் ரே”  யின் தமிழாக்கம் ‘ முறிந்த பாலம்’. என் ஆதர்ச எழுத்தாளர் எஸ்.ரா வின் பரிந்துரையின் பேரில் இப்புத்தகத்தை நான் படித்தேன். எந்த மொழியானாலும், இனமானாலும், காலகட்டமானாலும் மானுடத்தின் அடிப்படை பிரச்சனைகள், …

வாழ்வின் அர்த்தம். Read More »

அவரது நாட்கள்

இந்து தமிழ் தீபாவளி மலர் 2023ல் வெளியாகியுள்ள எனது சிறுகதை அவரது நாட்கள் குறித்து சிறந்த அறிமுகவுரையை வழங்கியுள்ளார் அஞ்சனா. அவருக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்

விமர்சனம்

ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள எனது சிறுகதை தொகுப்பிற்கான மதிப்பீடு The Man Who Walked Backwards and Other Stories Divya Shankar I love the little randomness that a collection of stories, in most cases, grants me. When I began this collection with the 13th story from a total of 18 stories, I didn’t know my first impression would be strong …

விமர்சனம் Read More »

அன்னாவும் அரசரும்.

வரலாற்றுப் பின்புலத்தில் உருவாக்கப்பட்ட உணர்ச்சிப்பூர்வமான கதைகள் ஹாலிவுட்டில் எப்போதும் வெற்றி பெற்றுள்ளன, அப்படியான ஒரு திரைப்படமே Anna and the King of Siam. 1946ல் வெளியானது சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த கலை இயக்கத்திற்கான ஆஸ்கார் விருது பெற்றுள்ளது. மார்க்ரெட் லாண்டன் நாவலை மையமாகக் கொண்டது. இக்கதை அமெரிக்காவில் இசைநாடகமாக நிகழ்த்தப்பட்டுப் பெரும்புகழ் பெற்றிருக்கிறது. அந்த வரவேற்பே படம் உருவாக முக்கியக் காரணம். சயாம் என்பது இன்றைய தாய்லாந்து. கதை 1862ல் நடக்கிறது. ராமா IV …

அன்னாவும் அரசரும். Read More »

வேரும் விழுதும்

எழுத்தாளர் க.சுப்ரமணியன் கோவையைச் சேர்ந்தவர். பொருளாதாரம் படித்துப் பட்டம் பெற்று டெல்லியில் மத்திய நிதித்துறை அமைச்சகத்தில் பணியாற்றியவர். கலைமகள் இதழில் நிறையக் கதைகள் எழுதியிருக்கிறார் இவரது வேரும் விழும் நாவலை வாசகர் வட்டம் 1970ல் வெளியிட்டிருக்கிறது. இந்த நாவலை எட்டு ஆண்டுகள் எழுதியிருக்கிறார். எவரும் இதனை வெளியிட முன்வரவில்லை. தி. ஜானகிராமனின் நண்பராக இருந்தவர் சுப்ரமணியன். ஜானகிராமன் இதனைப் படித்துப் பாராட்டி வாசகர் வட்டம் மூலம் நாவலை வெளியிடச் செய்திருக்கிறார். இந்த ஒரே ஒரு நாவலை மட்டுமே …

வேரும் விழுதும் Read More »

ரேடியோ நாடகம்

எனது காந்தியைச் சுமப்பவர்கள் சிறுகதை ரேடியோ நாடகமாகத் தயாரிக்கபட்டு வருகிறது. விரைவில் சென்னை வானொலியில் ஒலிபரப்பு செய்ய இருக்கிறார்கள். இந்தச் சிறுகதை ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. காந்தியை மையமாகக் கொண்ட தமிழ் சிறுகதைகளை சுனில் கிருஷ்ணன் தொகுத்துள்ளார். அதன் தலைப்புக் கதையாகவும் இடம் பெற்றுள்ளது.

சந்தோஷத்தின் பெயரால்

Wang Xuebo இயக்கிய KNIFE IN THE CLEAR WATER  2016ல் வெளியானது. ஷி ஷுகிங்கின் நாவலை மையமாகக் கொண்டு உருவாக்கியிருக்கிறார்கள். சீனாவின் வடமேற்கு நிங்சியா மாகாணத்திலுள்ள சிறிய கிராமம். அங்குள்ள விவசாயி மா ஜிஷானின் மனைவி இறந்துவிடுகிறாள். அவருக்கான இறுதி நிகழ்வில் படம் துவங்குகிறது. இறுதி ஊர்வலத்தில் மா ஜிஷான் தனியே அமைதியாக நடந்து செல்கிறார்.  தனது துயரை அவர் வெளிக்காட்டுவதில்லை. இறந்த மனைவிற்கான நாற்பதாம் நாள் சடங்கில் அவர்களின் எருதைப் பலி கொடுக்கலாம் என்று …

சந்தோஷத்தின் பெயரால் Read More »