பேச்சின் வாலைப் பிடித்தபடி..
எங்காவது போய் பேசிக் கொண்டிருக்கலாமா என்ற கேள்வி பலவருடமாக என்னை இலக்கற்று ஏதேதோ இடங்களுக்கு இழுத்து சென்றிருக்கிறது. நண்பர்கள், வாசகர்கள், சக எழுத்தாளர்கள், தோழர்கள், பேராசிரியர்கள், எளிய மனிதர்கள் என்று பலருடனும் பேசி விவாதித்து சண்டையிட்டு கழித்த பகலிரவுகள் என்னளவில் மிக முக்கியமானவை. இன்று அந்த இடங்களைக் கடந்து செல்கையில் இங்கே நின்று கொண்டு தானா அத்தனை மணி நேரம் பேசியிருக்கிறோம் என்று வியப்பாக இருக்கிறது. இடம் சூழல் பசி மறந்து பேசிய பொழுதுகளும் மனிதர்களும் சிதறிப்போய்விட்டார்கள். …