மண்டேலாவின் நாட்கள்
நெல்சன் மண்டேலா ராபின் தீவுச் சிறைச்சாலையில் இருந்த போது அவருக்கும் சிறையின் தணிக்கை அதிகாரியாக இருந்த ஜேம்ஸ் கிரிகோரி என்ற வெள்ளைகாரருக்குமான நட்பை மையமாகக் கொண்டு உருவாக்கபட்ட Goodbye Bafana என்ற படத்தைப் பார்த்தேன், வழக்கமான ஹாலிவுட் படங்களில் ஒன்று தான் இதுவும் என்பது போலத் துவங்கி மெல்லப் படம் என்னை முழுமையாக உள் இழுத்துக் கொண்டது நெல்சன் மண்டேலா பற்றி இரண்டு படங்களை முன்பாக பார்த்திருக்கிறேன் ஒன்று மண்டேலா என்ற டாகுமெண்டரி, மற்றொன்று மார்கன் ப்ரீமென் …