விழிக்கும் ஏரி
ஒரு பின்னிரவில் கொடைக்கானல் வந்து இறங்கினேன். மலை தெரியாத அளவு இரவு நிரம்பியிருந்தது. ஒளிரும் வெளிச்சங்கள் கூட மின்மினி பறப்பது போலதானிருந்தது. நல்ல குளிர். குளிராடையை மீறி உடம்பு நடுக்கம் கொண்டது. மலை நகரங்கள் யாவும் ஒன்று போலவே இருக்கின்றன. தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறைக்கு சென்று கதவை திறந்த போது கூடவே குளிரும் நுழைந்தது. முகம் பார்க்கும் கண்ணாடியெங்கும் குளிர் தெரிந்தது. கம்பளியை இழுத்து போர்த்திக் கொண்டு சுருண்டு கொண்டேன். உறக்கம் கொள்ளவில்லை. தாகமாக இருந்தது. …