admin

அபத்த இலக்கியம்

இரண்டு நாட்களின் முன்பாக மெக்சிகோவில் இருந்து Carlos  Solares என்ற எழுத்தாளர் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ஆங்கிலத்தில் வெளியான எனது சிறுகதையான ராமசாமிகள் வம்ச சரித்திரம் அவருக்கு மிகவும் பிடித்திருந்ததுஎன்றுவியந்துபாராட்டியிருந்தார்.அத்துடன் அக்கதையை ஸ்பானிய மொழியில் வெளியிடுவதற்கான அனுமதி கேட்டிருந்தார். பெங்குவின் இந்தியா The Tenth Rasa: An Anthology of Indian Nonsenseஎன்ற தொகுப்பை வெளியிட்டுள்ளது. அதில் எனது ராமசாமிகள் வம்ச சரித்திரம் சிறுகதை இடம் பெற்றுள்ளது. ஆங்கிலத்தில் இதைச் சிறப்பாக மொழியாக்கம் செய்திருப்பவர் லதா ராமகிருஷ்ணன் …

அபத்த இலக்கியம் Read More »

மத்தவிலாசம்

காளிதாசன், ஹர்ஷர், பாஷன் என்று தொடர்ந்து இரண்டு வாரங்களாகவே சமஸ்கிருதநாடங்களை வாசித்து வருகிறேன். நேற்று மத்தவிலாச பிரகசனம் என்ற நாடகத்தை வாசித்தேன் .இதை எழுதியது மாமல்லபுரச் சிற்பக்கலைக்குப் பெயர்பெற்ற மகேந்திரவர்ம பல்லவன். ஆயிரம் வருசங்களைத் தாண்டிய இந்த நாடகப்பிரதிகளை வாசிப்பது ஒரு தனித்த அனுபவம். இந்தியப் பண்பாட்டுச்சூழலில் நாடகம் எவ்வளவு முக்கியமான கலைவடிவமாக இருந்திருக்கிறது என்பதற்கான சாட்சியங்கள் இவை. சமஸ்கிருத நாடங்கள் இன்று அதிகம் மேடையற்றம் செய்யப்படுவதில்லை. ஆனால் புதிய மொழியாக்கங்கள் ஆங்கிலத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன. தமிழிலும் முக்கியமான சில …

மத்தவிலாசம் Read More »

நிகழ்வுகள்

youtube உள்ள எனது நேர்காணலின் ஏழு பகுதிகளுக்கான இணைப்புகள் இவை https://www.youtube.com/watch?v=rvSrAk1cJM8 Part 1 https://www.youtube.com/watch?v=XJFGE_nbcZs Part 2 https://www.youtube.com/watch?v=ZaxK6Nhz6kA Part 3 https://www.youtube.com/watch?v=vZ3kormDsEI Part 4 https://www.youtube.com/watch?v=UTIefcrWq4Q Part 5 https://www.youtube.com/watch?v=7AfUg1PDrUM Part 6 https://www.youtube.com/watch?v=YaXZpPae0w8 Part 7 ** நேற்று ஷாஜியின் புத்தக உரையாடல் நிகழ்வில் இயக்குனர் மணி ரத்னம் அவர்களைச் சந்தித்தேன், மாறாத எளிய புன்னகை, வார்த்தைகளை எண்ணிச் செலவிடும் அவரது இயல்பு, மேடையில் அவர் பேசிய ஐந்து நிமிசப் பேச்சினுள் இயல்பாக …

நிகழ்வுகள் Read More »

நேர்காணல் வீடியோ

இலக்கியம். புத்தகவாசிப்பு. பயணம் சார்ந்த எனது விரிவான நேர்காணலை நண்பர் ராம்குமார் வீடியோவில் பதிவு செய்திருக்கிறார், ஏழு பகுதிகளாக உள்ள இந்த நேர்காணலின் முதல் பகுதி தற்போது யூடியூப் இணையதளத்தில்  உள்ளது, https://www.youtube.com/watch?v=rvSrAk1cJM8

ஒளிராத நட்சத்திரம்

ஹாலிவுட் இயக்குனர்களில் பில்லி வொயில்டர் மிக முக்கியமானவர். இவரது The Apartment, Some Like It Hot, Sabrina, Double Indemnity,The LostWeekend  போன்ற படங்களைதேடித்தேடி பார்த்திருக்கிறேன். ஒவ்வொன்றும் தனித்துவமானவை. இவரது ஆகச்சிறந்தபடமாக நான் எப்போதும் கருதுவது  சன்செட் பொலிவார்டு (SUNSET BOULEVARD).  இருபதுக்கும் மேற்பட்ட முறை பார்த்திருக்கிறேன். இந்தப் படத்தை கறுப்புவெள்ளை காவியம் என்றே சொல்வேன். சினிமாவைப் பற்றிய சினிமா என்பது பெரும்பாலும் தோல்வியுற்ற வகையாகவே இருந்திருக்கிறது. அரிதாகவே ஒன்றிரண்டு படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. பில்லிவைல்டரின் இப்படம் …

ஒளிராத நட்சத்திரம் Read More »

விருது

இலக்கியம் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான அக்கறை குறித்த எனது பங்களிப்பிற்காக  ஜேசிஸ் அமைப்பு இளம் சாதனையாளர் என்ற விருதை எனக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது,  இதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி செப்டம்பர் 15ம் தேதி மாலை 6 மணி அளவில் ராணிப்பேட்டையில் நடைபெறுகிறது.

ஷாஜியின் நூலரங்கு

உயிர்மை நடத்தும் ஷாஜியின்  இசையின் தனிமை நூல்  பற்றிய ஒரு உரையாடல் நிகழ்வு 2010 செப்டம்பர் 18 சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் சென்னை ஃபிலிம் சேம்பர் திரை அரங்கில் நடைபெற உள்ளது, இதில் நான் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறேன், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படியாக அழைக்கிறேன் •• ஷாஜியின் இசையின் தனிமை நூல் ஒரு உரையாடல் 2010 செப்டம்பர் 18 சனிக்கிழமை மாலை 6 மணி ஃபிலிம் சேம்பர் திரை அரங்கம் ஜெமினி, …

ஷாஜியின் நூலரங்கு Read More »

ஒரு வாழ்க்கையின் துகள்கள்

எல்லா திருமணங்களிலும் இரண்டு திருமணங்கள் இருக்கின்றன. ஒன்று அவனுடையது. மற்றது அவளுடையது. அவனுடையது அவளுடையதை விட மேலானதாக இருக்கிறது. – ஜெஸ்ஸி பெர்னார்டு மைதிலி சிவராமன் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மூத்த தலைவர், பெண்உரிமைகள் சார்ந்த தீவிர செயல்பாட்டாளர். அவர் தனது தாய்வழிப்பாட்டியான சுப்புலட்சுமியின்நாட்குறிப்பு களைச் சேகரித்து அதன் வழியே அவரது வாழ்க்கை சித்திரத்தை எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் வெளியான அப்புத்தகம் தற்போது பாரதி புத்தகாலயம் சார்பில் கி. ரமேஷால் மொழியாக்கம் செய்யப்பட்டு  ஒரு வாழ்க்கையின் …

ஒரு வாழ்க்கையின் துகள்கள் Read More »

நன்றி

மதுரையில் எனது ஐந்து புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது, அரங்கு நிறைந்து இடமின்றி 200 பேர்களுக்கும் மேலாக வெளியே நின்று கொண்டிருந்தனர், எனது நண்பர்கள். விருப்பமான எழுத்தாளர்கள். அன்பிற்குரிய வாசகர்கள். இணைய பதிவாளர்கள். பத்திரிக்கையாளர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து இந்த நிகழ்வை மிகச் சிறப்பாக்கினார்கள். என்னையும் எழுத்தையும் நேசிக்கும் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், எனது புத்தகங்களை தொடர்ந்து வெளியிடும் உயிர்மை பதிப்பகத்திற்கும் அன்பு நண்பர் மனுஷ்யபுத்திரனுக்கும். என் …

நன்றி Read More »

புள்ளியும் கோடும்

புள்ளியும் கோடும் -கணிதம் வழியாக ஒரு காதல் என்ற குறும்படம் ஒன்றினை இணையத்தில் பார்த்தேன். 1965ம் ஆண்டு உருவாகக்கபட்ட இப்படம் நார்டன் ஜஸ்டரின் புத்தகத்தினை அடிப்படையாக கொண்டு உருவாக்கபட்டுள்ளது. எம்.ஜி. எம் நிறுவனம் தயாரித்துள்ள இக்குறும்படம்  பத்து நிமிசங்கள் ஒடக்கூடியது. கான்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த குறும்படத்திற்கான விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கணிதத்தை இவ்வளவு எளிமையான ஒரு காதல் கதையாக உருமாற்ற முடிந்திருப்பது பெரிதும் வியப்பளித்தது.  ஒரு புள்ளியைக் காதலிக்கும் நேர்கோட்டின் கதை என்ற புனைவு  ரீதியிலும் மிக …

புள்ளியும் கோடும் Read More »