எனக்குப் பிடித்த கதைகள்

என்றாவது ஒரு நாள்

காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் (ஆங்கிலத்திலிருந்து தமிழில்: எஸ்.எம்.ஏ.ராம்) அந்தத் திங்கள் கிழமை மழையின்றி வெதுவெதுப்பாய் விடிந்தது. முறையான மருத்துவப் பட்டம் எதுவுமற்ற பல் மருத்துவர் ஆரிலியோ எஸ்கோவர் விடிகாலையிலேயே எழுந்து விடும் வழக்கமுள்ளவர் என்பதால், சரியாய் ஆறு மணிக்குத் தன் அலுவலகத்தைத் திறந்தார். இன்னமும் பிளாஸ்டர் அச்சிலேயே பொருத்தி இருந்த  சில பொய்ப்பற்களைக் கண்ணாடிப் பெட்டியிலிருந்து  வெளியில் எடுத்தார். பின், கை நிறையப் பல் சிகிச்சைக் கருவிகளை அள்ளி எடுத்து, அவற்றின் நீளங்களுக்கு ஏற்றவாறு, காட்சிக்கு வைப்பது …

என்றாவது ஒரு நாள் Read More »

எனக்குப் பிடித்த கதைகள்- 37

சீனாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் லியு ஷின்-யு (Black Walls – Liu Xin Wu) எழுதிய கருப்புச் சுவர்கள் சிறுகதை இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டிருக்கிறது. தனிநபரின் விருப்பமும் பொதுப்புத்தியும் கொள்ளும் மோதல் ஒரு குறியீடு போலவே இக்கதையில் சித்தரிக்கபடுகிறது. மிகச்சிறந்த கதை. இந்தக் கதையைச் சீனாவில் குறும்படமாகவும் எடுத்திருக்கிறார்கள் •• கருப்புச் சுவர்கள் லியு ஷின்-யு தமிழாக்கம்: தி.இரா.மீனா •••• கோடைகாலம். ஒரு ஞாயிற்றுக் கிழமை ஒரு சந்து. அங்கு ஒரு வீட்டோடு சேர்ந்த …

எனக்குப் பிடித்த கதைகள்- 37 Read More »

எனக்குப் பிடித்த கதைகள் -37

கடவுளின் பறவைகள் / மியா கூட்டோ (Mia Couto)  (மொஸாபிக் ) தமிழில்: பாலகுமார் விஜயராமன் •••• மன்னித்துக் கொள்ளுங்கள், ஒரு யாத்ரீகனைப் போல எனக்கு நதியைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது. நீரலைகள் முடிவற்ற பயணத்தில் கடந்து சென்று கொண்டே இருக்கின்றன. எவ்வளவு காலமாக இப்படி பயணித்துக் கொண்டே இருப்பது, நீரின் வேலையாளாக இருந்திருப்பது? தனது பழைய வள்ளத்தில் தனியாக அமர்ந்திருந்த எர்னெஸ்டோ டிம்பா, தனது வாழ்வைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான். பனிரெண்டாவது வயதில், நதியிலிருந்து மீன்களைப் …

எனக்குப் பிடித்த கதைகள் -37 Read More »

எனக்குப் பிடித்த கதைகள் 36

திருடன் – ஜினிசிரோ தனிஜகி ஜப்பானியச் சிறுகதை ஆங்கிலம்: ஹோவர்ட் ஹிப்பெட் தமிழில் : தி. இரா. மீனா பல வருடங்களுக்கு முன்னால், டோக்யோ இம்பீரியல் பலகலைக்கழகத்தில் சேருவதற்காக நான் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த பள்ளி அது. நானும் அறைக்கூட்டாளிகளும் ‘மெழுகுவர்த்தி படிப்பு’ என்கிற பெயரில் அதிக நேரம் செலவழிப்போம் (அதில் படிப்பது மிகக்குறைவாகத்தான் இருக்கும்). ஒரு நாள் இரவு, விளக்குகள் அணைந்து வெகு நேரத்திற்குப் பிறகும் நாங்கள் நால்வரும் மெழுவர்த்தியைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு பேசியபடி …

எனக்குப் பிடித்த கதைகள் 36 Read More »

எனக்குப் பிடித்த கதைகள் 35

கார்லோவுக்கு எப்படி வாசிப்பது என்று தெரியாது கியூலியோ மோஸி ஆங்கிலத்தில்: எலிசபெத் ஹாரிஸ் தமிழில்: சுகுமாரன் கார்லோவுக்கு (அது நான்தான்) எப்படி வாசிப்பது என்று தெரியாது. அவன் மாபெரும் புத்தகங்களை வாசிக்கிறான். அந்தப் புத்தகங்களை வாசிக்கும்போது கார்லோவுக்கு ஒரு வார்த்தையும் புரிவதில்லை. அந்தப் புத்தகங்களில் கார்லோ  எதைப் பார்க்கிறானோ  அதையே நினைவில் வைத்துக்கொள்கிறான். கார்லோ வாசிக்கும்போது அடிக்கடி கண்களை  மூடிக் கொள்கிறான். சில சமயங்களில் தூங்கி விடுகிறான். தூங்கும்போது பொருட்களைப் பார்க்கிறான். விழித்தெழுந்ததும்  மறுபடியும்  வாசிப்பைத் தொடர்கிறான். …

எனக்குப் பிடித்த கதைகள் 35 Read More »

எனக்குப் பிடித்த கதைகள் 34

பாத்திமா – ஹைஃபா பீதர்(haifa bitar) தமிழில் விக்னேஷ் பாத்திமா பிச்சை எடுக்கும் குழந்தை என்பதால் மட்டும் அவள் என் கவனத்தை ஈர்க்கவில்லை. வாழ்வின் துயரங்களுக்கு எடுத்துக்காட்டாக, சாலைகளிலும் தெருக்களிலும் போவோர் வருவோரை மறித்துப் பிச்சை எடுக்கும் எத்தனையோ குழந்தைகளை, என்னையும் மீறி நான் பார்த்துப்  பழகியிருக்கிறேன். ஆனால் பத்து வயது கூட நிரம்பியிராத இந்த பாத்திமாவினுள் உள்ள ஏதோ ஒன்று என் அறிவை முடக்கி உணர்ச்சிகளின் வசப்படுத்துகிறது. அவள் என் அலுவலகத்திற்கு வரும் போதும், அவளை …

எனக்குப் பிடித்த கதைகள் 34 Read More »

எனக்குப்பிடித்த கதைகள் 33

மணலில் மறைந்த நாணயம் எர்னெஸ்ட் பக்லர் தமிழில் : ராஜ் கணேசன். இறுதிச்சடங்கு நடப்பதற்கு முந்தைய நாள் மாலை நானும் எனது அக்காவும் வயல்வெளியில் பழைய நினைவுகளை அசைபோட்டபடி நடந்து கொண்டிருந்தோம். வெகு நாட்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு வருபவர்கள், தங்கள் சிறுவயது நிகழ்வுகளை நினைத்துப் பார்ப்பது போல நாங்கள் எங்கள் இளம்பிராயத்து நினைவுகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அக்கா என்னிடம், “ஒரு நாள் மதியம் நீ தொலைந்து போனதாக நினைத்து நாங்கள் தேடினோமே உனக்கு நினைவிருக்கிறதா?” …

எனக்குப்பிடித்த கதைகள் 33 Read More »

எனக்குப் பிடித்த கதைகள் 33

கருப்பு ஆடு – இதாலோ கால்வினோ தமிழில் ராஜ் கணேசன். திருடர்கள் மட்டுமே வாழ்ந்த தேசம் ஒன்றிருந்தது. ஒவ்வொரு இரவும் அவர்கள் அனைவரும் கள்ளச்சாவிகளையும் லாந்தர் விளக்குகளையும் ஏந்திக் கொண்டு அக்கம் பக்கத்தில் ஏதாவது ஒரு வீட்டிற்குத் திருடச்செல்வார்கள். திருடிய பொருட்கள் அனைத்தையும் அள்ளிக்கொண்டு விடிந்த பின்னர் வீடு திரும்புகையில் அவர்களுடைய வீட்டில் உள்ள அனைத்தும் வேறு சிலரால் களவாடப்பட்டு இருக்கும். இது போலத் தினமும் ஒருவர் மாற்றி ஒருவர் திருடிக் கொண்டிருந்தார்கள். இப்படியே அனைவரும் மகிழ்ச்சியாக …

எனக்குப் பிடித்த கதைகள் 33 Read More »

எனக்குப் பிடித்த கதைகள் 32

மாமிசம் – விர்ஜிலியோ பினோரா (Virgilio Piñera) மொழிபெயர்ப்பு: ரவிக்குமார் அது சாதாரணமாகத்தான் நடந்தது, எந்தப் பாவனையுமில்லாமல். அந்த நகரம் இறைச்சிப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருந்தது, அதற்கான காரணங்களை இங்கே விவரிக்கத் தேவையில்லை. எல்லோரும் கலவரப்பட்டார்கள், மிக மோசமான விமர்சனங்கள் காதில் விழுந்தன. பழி வாங்கப் போவதாகவும் பேசப்பட்டது. ஆனால், வழக்கம்போல மிரட்டல்களைத் தாண்டி எதிர்ப்பு வளரவில்லை, பாதிக்கப்பட்ட அந்த நகரத்தின் மக்கள் வெகுசீக்கிரமாகவே,பலதரப்பட்ட காய்கறிகளையும் தின்பதில் ருசிகண்டு விட்டார்கள். திரு. அன்சால்டோ மட்டும்தான் அந்த நகரத்தில் விதிவிலக்கு. …

எனக்குப் பிடித்த கதைகள் 32 Read More »

எனக்குப் பிடித்த கதைகள் 31

ஷா ஆலம் முகாமின் ஆவிகள் உருதுக்கதை : அஸ்கர் வஜாஹத் (Asghar Wajahat) தமிழில் – ராகவன் தம்பி ஷா ஆலம் முகாமில் பகல்கள் எப்படியோ ஒருவாறு கழிந்து கொண்டிருந்தன. ஆனால் இரவுகள் மட்டும் முடிவிலாது நீண்ட துர்சொப்பனாங்களாகிக் கொண்டிருந்தன. இந்தக் கொடுமையான நரகவேதனையிலிருந்து ஆண்டவரால் மட்டுமே எங்களைக் காப்பாற்ற முடியும். என்ன ஒரு மிகப் பயங்கரமான அமளி இது? உங்களுடைய குரலையே உங்களால் மிகவும் பலவீனமாகத்தான் கேட்க முடிகிற அளவுக்கு கூக்குரலும் ஓலமும், முனகலும், பேரழுகையும் …

எனக்குப் பிடித்த கதைகள் 31 Read More »