எனது பரிந்துரைகள் -5 காந்திய நூல்கள்
காந்தி பற்றி தமிழில் வெளியாகியுள்ள முக்கியமான நூல்களைத் தொகுத்திருக்கிறேன். நேரடியாக தமிழில் எழுதப்பட்ட காந்திய நூல்களைத் தனியே பதிவிட இருக்கிறேன். இதில் பெரும்பான்மை மொழியாக்க நூல்களே. 1) காந்தி வாழ்க்கை லூயி ஃபிஷர் தமிழில் : தி.ஜ.ர. பழனியப்பா பிரதர்ஸ் பத்திரிக்கையாளரான லூயி ஃபிஷர் காந்தியோடு நேரில் பழகியவர். காந்தியின் வரலாற்றை லூயி ஃபிஷர் மிகச்சிறப்பாக எழுதியிருக்கிறார். இந்த நூலை அடிப்படையாகக் கொண்டே காந்தி திரைப்படம் உருவாக்கப்பட்டது 2)மகாத்மா காந்தியின் ஐந்து விநாடிகள் வால்டெர் ஏரிஷ் ஷேபெர் …