கவிஞனும் கவிதையும் -4 சு துங் போவின் நிலவு
அமெரிக்கக் கவிஞர் W.S.மார்வின் பதினோறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சீனக்கவிஞர் சு துங் போ (Su Tung-Po) பற்றி ஒரு கவிதை எழுதியுள்ளார். சு துங் போவிற்கு ஒரு கடிதம் என்ற அந்தக் கவிதையில் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் கேட்ட அதே கேள்விகளைத்தான் நானும் கேட்கிறேன் தொனியைத் தவிர வேறு எதுவும் மாறவில்லை என்கிறார் மார்வின் சு துங் போவை வாசித்தவர்களுக்குத் தெரியும். அவர் விடையில்லாத கேள்விகளை எழுப்பி அதன் வழியே இயற்கையின் மர்மத்தை, வாழ்வின் …