காந்தியின் நிழலில் 6 இன்றைய தேவை.
காந்தி இன்றிருந்தால் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவாரா என்றொரு கேள்வியை தினேஷ் என்ற கல்லூரி மாணவர் மின்னஞ்சலில் கேட்டிருந்தார். நிச்சயம் பயன்படுத்துவார். காந்தியின் காலத்திலிருந்த தந்தி, கடிதம், தொலைபேசி எல்லாவற்றையும் அவர் பயன்படுத்தியிருக்கிறார் தானே. ஆனால் எப்படிப் பயன்படுத்தினார் என்பதில் தான் அவரது தனித்துவமிருக்கிறது. நம்மில் பெரும்பான்மையினர் சமூக ஊடகங்களின் வழியே மனதிலுள்ள வெறுப்பை, கசப்பை, எதிர்மறையான எண்ணங்களைப் பொதுவெளியில் கக்குவது போல அவர் ஒரு போதும் நடந்து கொள்ள மாட்டார். சமூக ஊடகங்களின் …