சிறிய உண்மைகள்

சிறிய உண்மைகள். 3 பூவின் மென்மை

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் எழுதிய பூவை என்ற சிறுகதையில் பேரக்கா என்ற ஒரு பெண் வருகிறாள். அவள் ஒரு அநாதை. அண்டி வாழும் அவள் மாடு மேய்க்கிறாள். பாட்டிக்குக் கைகால் பிடித்துவிடுகிறாள். அவளுக்குத் தலைமுடி சரியாக வளரவில்லை என்று மொட்டையடித்துவிடுகிறார்கள். நாலைந்து முறை இப்படிச் செய்தபிறகே அவளுக்குக் கூந்தல் வளருகிறது. அவளது கல்யாண நாளை பற்றியதே கதை. மணப்பெண் என்பதால் அவளை அலங்கரித்துத் தலையில் பூச்சூடுகிறார்கள். இந்தப் பூவாசனை தாங்காமல் பேரக்கா மயங்கிவிடுகிறாள். காரணம் இதுவரை அவள் பூச்சூடி …

சிறிய உண்மைகள். 3 பூவின் மென்மை Read More »

சிறிய உண்மைகள் 2

பசியின் குரல் பசியைப் பிணி என்கிறது மணிமேகலை. அட்சயபாத்திரத்தைக் கையில் ஏந்தி உலகின் பசிப்பிணியைப் போக்குகிறாள் மணிமேகலை. இப்படி ஒரு கதாபாத்திரமோ, அட்சய பாத்திரமோ இந்தியாவின் வேறு மொழி இலக்கியங்கள் எதிலும் இடம்பெற்றிருக்கிறதா என்று தெரியவில்லை. பசியாற்றுவதைப் அறமாகக் கருதிய தமிழ்ச் சமூகம் பசியால் ஏற்படும் இன்னல்களை. வறுமையால் ஏற்பட்ட பசிக்கொடுமையின் விளைவுகளையும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது. புறநானூறு படித்தால் பசியின் குரல் தான் மேலோங்கி ஒலிக்கிறது. பசியும் வறுமையும் பற்றிச் சங்க இலக்கியம் ஏராளமாகப் பதிவு …

சிறிய உண்மைகள் 2 Read More »

சிறிய உண்மைகள்-1

அபுவின் சந்தோஷம். சத்யஜித்ரேயின் அபூர் சன்சார் படத்தில எழுத்தாளராக ஆக விரும்பும் அபு தன் நண்பனிடம் தனக்குப் பிடித்த எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லும் போது தஸ்தாயெவ்ஸ்கியின் பெயரைச் சொல்கிறான். அது மூலத்தில் விபூதி பூஷன் எழுதியதா என்று தெரியவில்லை. ஆனால் சத்யஜித் ரேயிற்குத் தஸ்தாயெவ்ஸ்கியைப் பிடிக்கும் என்பதை அவரது நேர்காணலில் தெரிந்து கொள்ள முடிகிறது. புகழ்பெற்ற சினிமா இயக்குநர்கள் பலரும் தஸ்தாயெவ்ஸ்கியின் வாசகர்களே. அகிரா குரசேவா நேர்காணல் ஒன்றில் இடியட் நாவலைப் படமாக்கும் போது ஒரு குறிப்பிட்ட …

சிறிய உண்மைகள்-1 Read More »