சலீம்-ஜாவேத்
ஹிந்தி திரையுலகின் பிரபல திரைக்கதை ஆசிரியர்களான சலீம்-ஜாவேத் பற்றி DIPTAKIRTI CHAUDHURI எழுதிய WRITTEN BY SALIM JAVED என்ற புத்தகத்தை வாசித்தேன். மிகவும் சுவாரஸ்யமான நூல். ஹிந்தி சினிமாவின் முக்கிய இயக்குநர்கள், பிரபல நடிகர்கள் பற்றிப் புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனால் அதன் முக்கியத் திரைக்கதையாசிரியர்களான குல்சார் , கே. ஏ. அப்பாஸ், ராஜேந்தர் கிஷன். விஜய் டெண்டுல்கர், ராஜேந்தர் சிங் பேதி, வி.பி. சாதே. சத்யன் போஸ், சச்சின் பௌமிக், காதர்கான், இந்தர் ராஜ் ஆனந்த் …