நூலக மனிதர்கள் 32 ரகசிய விளையாட்டு.
நூலகரை முக்கியக் கதாபாத்திரமாகக் கொண்டு தமிழில் ஏதாவது நாவல் எழுதப்பட்டிருக்கிறதா, அல்லது திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறதா என ஒரு வாசகர் மின்னஞ்சலில் கேட்டிருந்தார். நான் அறிந்தவரை நூலகக் காட்சிகள் சினிமாவில் இடம்பெற்றிருக்கின்றன. நூலகர் ஒரு கதாபாத்திரமாக நாவலில். சினிமாவில் வந்திருக்கிறார். நூலகரின் வாழ்க்கையை விவரிக்கும் நாவல் எதையும் வாசிக்கவில்லை. ஆங்கிலத்தில் ஏராளம் இருக்கின்றன. ஹாலிவுட் படங்களில் நூலகரை மையக் கதாபாத்திரமாகக் கொண்டு நிறையப் படங்கள் வெளியாகியுள்ளன. நியூயார்க் பொது நூலகம் நிறையப் படங்களில் காட்டப்பட்டிருக்கிறது. ஹாரிபோட்டரில் வரும் நூலகம் …