நூலக மனிதர்கள். 22 யயாதியின் நண்பர்
நூலகத்திற்கு வருபவர்களில் ஐம்பது வயதைக் கடந்தவர்கள் பெரும்பாலும் காண்டேகரின் யயாதி படித்தவர்கள். நிச்சயம் ஒன்றுக்கு மேற்பட்ட முறை அந்த நாவலைப் படித்திருப்பார்கள். சிலர் காண்டேகரின் எல்லா நாவல்களையும் வாசித்திருக்கிறார்கள் அவர்கள் பேச்சில் அன்றாடம் யயாதி இடம்பெறுவது வழக்கம். மராத்திய எழுத்தாளரான காண்டேகரைப் பலரும் தமிழ் எழுத்தாளர் என்றே நினைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த அளவு அவரைக் கா.ஸ்ரீ.ஸ்ரீ சரளமாகத் தமிழில் மொழிபெயர்த்திருந்தார் நூலகத்தில் அதிகமாக எடுத்துச் செல்லப்பட்ட புத்தகங்களில் ஒன்றாக யயாதி இருந்தது. நான் ஒரு முறை யயாதியை …