நூலக மனிதர்கள் 12 நீண்ட கால வாசகர்
நூலகத்தில் ஆண்டுக்கு ஒரு முறை விழா நடப்பது வழக்கம். அந்த நாளில் சிறப்புரைக்காகத் தமிழ் அறிஞர்கள் எவரையாவது அழைப்பார்கள். அன்று புத்தக அறிமுகம் செய்து வைக்கும் சிற்றுரைகளும் நடைபெறும். நூலகப்பணியாளர்கள் மற்றும் புரவலர்கள் கௌரவிக்கப்படுவார்கள். அப்படி ஒரு விழா நடக்கும் போது நீண்டகால வாசகர் ஒருவருக்குப் பாராட்டுச் செய்யலாம் என்ற யோசனையைச் சொன்னேன். நூலகர் அதை உடனே ஏற்றுக் கொண்டார். எந்த ஆண்டு முதல் உறுப்பினராக இருக்கிறார்கள் என்பதுடன் எவ்வளவு ஆண்டுகள் தொடர்ந்து நூலகத்திற்கு வருகை தருகிறார்கள் …