புத்தகக் காட்சி தினங்கள்- 5
கடந்த இரண்டு நாட்களாகப் புத்தகக் கண்காட்சியில் நல்ல கூட்டம். நேற்று ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான வாசகர்கள் திரண்டிருந்தார்கள். அரங்கினுள் வெக்கை தாங்கமுடியவில்லை. வியர்த்து வழிய மக்கள் புத்தகங்களை வாங்கிச் சென்றார்கள். இத்தனை ஆயிரம் வாசகர்கள் ஒன்று சேர்ந்து பதிப்புத் துறைக்கு புதிய நம்பிக்கையை உருவாக்கித் தந்திருக்கிறார்கள். இனி மற்ற நகரங்களில் புத்தகக் கண்காட்சி சிறப்பாகத் தொடரும். ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்கள் சங்க இலக்கியம் குறித்து ஆற்றிவரும் உரைகளின் முதற்பத்து உரைகளின் நூல் வடிவினை நேற்று வெளியிட்டேன். சங்கச்சுரங்கம் என்ற …