மூத்தோர் பாடல் -2 காதலின் கானல் உருவங்கள்.
கலித்தொகையிலுள்ள பாலைக்கலி ஒன்பதாவது கவிதையை வாசிப்பதற்கு முன்பு ஒரு காட்சியைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். கொதிக்கும் வெயில் பரந்த பாலை நிலத்தில் காதல் வசப்பட்ட ஒரு இளைஞனும் இளம்பெண்ணும் வீட்டைவிட்டு ஓடிப்போகிறார்கள். உடன்போக்குதல் பாலையின் இயல்பு. அப்படித் தான் அந்த இளைஞனும் பெண்ணும் புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளச் செல்கிறார்கள். நடந்தால் மட்டுமில்லை. அதைப்பற்றி நினைத்தாலே சுடக்கூடியது பாலை நிலம். பாலையின் கடுமை அந்த இளைஞனுக்குத் தெரிந்திருக்கலாம். அந்த இளம்பெண்ணுக்கு முழுமையாகத் தெரியாது. அவள் பாலை நிலத்திலே …