வாசிப்பில் இன்று -1
இன்று காலை Anthony Burgess எழுதிய Abba Abba நாவலை வாசித்தேன். 120 பக்கங்கள் கொண்ட சிறிய நாவல் ** கீட்ஸின் மறுமொழி. ஆன்டனி பர்கஸ் எழுத்தாளர்களைப் பற்றி நாவல்கள் எழுதக்கூடியவர். இவர் ஷேக்ஸ்பியர் , மார்லோ பற்றி எழுதிய நாவல்கள் சுவாரஸ்யமானவை. புகழ்பெற்ற கவிஞரான கீட்ஸ் மற்றும் பெல்லி குறித்து இவர் எழுதிய சிறுநாவல் Abba Abba 1821 பிப்ரவரி 23ல் தனது இறந்து போனார் கீட்ஸ், அப்போது அவரது வயது 25. காசநோயால் பாதிக்கபட்ட …