இடக்கை – நீதிமுறையின் அரசியல்
-மணி செந்தில் தமிழ் மொழியின் நாவல் வரலாறு மிக நீண்ட பாரம்பரிய பெருமைகள் கொண்டது. தமிழின் முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம் 1879 ஆம் ஆண்டு வெளியானது. அதன் ஆசிரியர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. அவரிலிருந்து தொடங்கி இன்னும் செழுமையாக நீண்டு கொண்டிருக்கும் எண்ணற்ற எழுத்தாளர்கள் தமிழ் மொழியின் நவீன நாவல் வகைமையை தரம் குறையாமல் தங்கள் எழுத்துக்களால் பெருமை சேர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அவ்வகையில் சமகால எழுத்தாளர்களில் மிக முக்கிய எழுத்தாளராக எஸ்.ராமகிருஷ்ணன் விளங்குகிறார். …