விமர்சனம்

துயில் : ஒரு பார்வை

எனது நண்பரும் தீவிர இலக்கிய வாசகருமான டாக்டர் ராமானுஜம் திருநெல்வேலியில் உளவியல் மருத்துவராகப் பணியாற்றுகிறார், அவர் எனது துயில் நாவல் பற்றி எழுதிய விமர்சனம் •• துயில்: நோய்மையின் வரலாற்று, உளவியல் பதிவு மனிதனுக்கு நேரும் சிக்கல்களிலேயே அவன் மிகவும் அஞ்சுவது நோய்க்குத்தான். வேறு எதையும் விட அவனால் தாங்கமுடியாதது மர்மங்களை.மற்ற பிரச்சனைகளைத் தீர்க்க முடியாவிட்டாலும் ஏன் வந்தது என்ற காரணத்தையாவது அறிந்திருப்பான்.ஆனால் நோய் வந்தவுடன் அவன் மருத்துவரிடம் கேட்கும் முதல் கேள்வி ‘இது ஏன் வந்தது’ …

துயில் : ஒரு பார்வை Read More »

யாமம் – தமிழ்மகன் விமர்சனம்

 ஒரு நாவலுக்குள் ஐந்து நாவல்கள்  பகலை அப்படியே புரட்டிப் போட்டுவிடுகிறது இரவு. விழித்துக் கொண்டிருந்த மனிதர்கள் தூங்குகிறார்கள்.. இது வெளிப்படையான வித்தியாசம். இரவை உரித்துக் கொண்டே போகலாம். நல்லவர்களாக இருந்த பலர் கெட்டவர்களாக உருமாறுவார்கள். ஒழுக்கம் சற்றே வழுக்கும். நெறிமுறைகள் நகர்ந்து கொள்ளும். சபலங்கள் கண்விழிக்கும்… இரவு மனதின் விருப்பத்துக்கு நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையை உடையதாக இருக்கிறது. வெளிச்சம் குறைவது பலருக்குப் பாதுகாப்பாக இருக்கிறது. ஞானிகளுக்கோ அதுதான் தத்துவார்த்த சிந்தனையைச் செதுக்கும் நேரமாக இருக்கிறது. நாவலில் அப்துல் …

யாமம் – தமிழ்மகன் விமர்சனம் Read More »

நெடுங்குருதி இரண்டு விமர்சனங்கள்

உறுபசி கொண்ட ஊர் – வேம்பலை ஜெயந்தி சங்கர் ஊரையும் உணர்வையும் பாத்திரங்களாக்கும் வித்தை எஸ் ராவின் எழுத்துக்குப் பலம். மூன்று தலைமுறைகளைத் தொட்டுச் செல்லும் ‘நெடுங்குருதி’யின் முக்கிய கதாபாத்திரம் வெம்மை என்றால் ‘உறுபசி’யில் காமம். நூலாசிரியருக்குப் பிடித்தமான வ்ய்யில் அவரின் எளிய நடையைத் தொடர்ந்து நிழலெனக் கூடவே வருகிறது. வெயில் மீதான எஸ் ராவின் காதல் உறுபசையில் வெளிப்படும் இடங்களெல்லாம் கதையோடு ஒட்டாமல் துருத்திக்கொண்டு நின்றிருக்கும். ஆனால், அதற்கு நேர்மாறாய் ‘நெடுங்குருதியில்’ பின்னிப் பிணைந்து கிடக்கிறது. …

நெடுங்குருதி இரண்டு விமர்சனங்கள் Read More »

உபபாண்டவம் ஒரு பார்வை

 – ந. சிதம்பரம் – புத்தக விமர்சனம் ”மகாபாரதம்” ஒரு கடல். பல கதைகளையும், கதைக்குள் கதைகளையும், மாறுபட்ட கதாபாத்திரங்களையும் கொண்டது. ”பாரதம்” எண்ணற்ற விமர்சனங்களுக்கும்; மறுவாசிப்புகளுக்கும் வழிவகுத்த நூல். மீண்டும் ஒருமுறை இலக்கிய நோக்கில் இந்தக் கதையை எஸ்.ரா. தனது பாணியில் சொல்லியிருப்பதே பெரிய விஷயம்தான். வில்லிபுத்தூரர் தமது பாரதத்திற்கு மூல நூலாக அகத்தியரின் ”பாவபாரதம்” என்ற நூலைக் கொண்டார். உரைநடையில் மகாபாரதத்தை எழுதிய சித்பவானந்தன், ராஜாஜி, சோ போன்றவர்கள் வியாசபாரதத்தை மூல நூலாகக் கொண்டனர். சித்பவாலானந்தர் …

உபபாண்டவம் ஒரு பார்வை Read More »

கடக்க முடியாத யாமம்

எனது நாவல் யாமம் குறித்து கவிஞர் சமயவேல் எழுதிய சிறப்பான விமர்சனக்கட்டுரை •• இரவால் கோர்க்கப்பட்ட கதைகள் – சமயவேல்   எஸ்.ராமகிருஷ்ணனின் புதினம் யாமத்தை வாசித்துக் கொண்டிருந்த போது கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம் ஒரு கர்ண பரம்பரைக் கதைகளின் தொகுப்பு என அன்றைய புத்திலக்கியப் பரப்பால் ஒதுக்கப்பட்டது ஞாபகம் வந்தது. எனவேதான் ‘யாமம்’ பற்றிய இந்த எழுத்தாடலை ஒரு வாசகத் தளத்திலிருந்து தொடங்க விரும்புகிறேன். விதம் விதமாகக் கசியும் இருளுக்குள் ஏராளமான கதைகள் மெல்லிய குரலில் …

கடக்க முடியாத யாமம் Read More »

எஸ்.ஏ. பெருமாள்

எனது செகாவின் மீதுபனி பெய்கிறது நூல் பற்றி மிக அருமையான விமர்சனம் ஒன்றினை தமிழகத்தின் முக்கிய மார்க்சிய அறிஞரும், படைப்பாளியுமான தோழர் எஸ்.ஏ.பெருமாள் அவர்கள் எழுதியிருக்கிறார், இது புத்தகம் பேசுது டிசம்பர் இதழில் வெளியாகி உள்ளது, வாசகர்களின் கவனத்திற்கான அந்தக் கட்டுரையைத் தந்திருக்கிறேன் •• உலக இலக்கியவாதிகளை அறிமுகப்படுத்தும் நூல் –எஸ்.ஏ. பெருமாள்  இலக்கியங்களை வாசிப்பதும், அவற்றைப் பற்றிப் பேசுவதும், எழுதுவதும் ஒரு அற்புதக்கலை. அதுவும் கூட மிகச்சிறந்த படைப்பாளிகளுக்கே அது சாத்தியமும் ஆகும். தமிழில் ஒரு …

எஸ்.ஏ. பெருமாள் Read More »

பதினெட்டாம் நூற்றாண்டின் மழை

என் ஆதர்ச எழுத்தாளரான அ.முத்துலிங்கம் அவர்கள் எனது சிறுகதைத்தொகுப்பான ‘பதினெட்டாம் நூற்றாண்டின் மழை’ பற்றி எழுதிய கட்டுரை. •• தனியாக அனுப்பிவிட்ட மகிழ்ச்சி அப்பூதியடிகள் என்ற தொண்டரைப்பற்றி பெரியபுராணத்தில் படித்திருப்போம். அவர் திருநாவுக்கரசரில் அளவில்லாத பக்தி கொண்டவர். திருநாவுக்கரசரை அவர் பார்த்தது கிடையாது, கேள்விப்பட்டதுதான். ஆன்மீக குருவாக அவரை வரித்து நிறைய தானதருமங்கள் செய்து வந்தார். அவருடைய பிள்ளைகள் எல்லோருக்கும் ‘திருநாவுக்கரசர்’ என்றே பெயர் சூட்டினார். ஆடு மாடுகளுக்கும் அதே பெயர்தான். திருநாவுக்கரசர் பெயரால் ஒரு தண்ணீர் …

பதினெட்டாம் நூற்றாண்டின் மழை Read More »

எஸ்.ராமகிருஷ்ணனின் நவீன மீபொருண்மை உலகு

ஜெய மோகன் முகலாய ஓவியங்களைக் கவனித்திருப்பவர்கள் இதைக் கண்டிருக்கலாம். முகலாய  பாதுஷாக்கள் கையில் ஒரு ரோஜா மலரை முகர்ந்தபடித்தான் வரையபட்டிருப்பார்கள். அந்தரப்புரக் காட்சிகளிலும் அரசவைக் காட்சிகளிலும் மட்டுமல்ல.பெரும் போர்க்களாக் காட்சிகள் வேட்டைக் காட்சிகளில் கூட. முகலாய -சூபி மரபில் ரோஜா என்பது ஒரு மலர் மட்டுமல்ல. எரியும் பாலைவெளியில் அப்படிப்பட்ட ஒரு செடி வளர்ந்து அவ்வழகிய மலரை எப்படி உருவாக்குகிறது? முற்றிலும் கைக்குச் சிக்கக்கூடிய ஜடப்பொருளான மலருக்குள் இருந்து தொடமுடியா அற்புதமான மணம் எப்படி வந்தது? இப்பிரபஞ்சம் …

எஸ்.ராமகிருஷ்ணனின் நவீன மீபொருண்மை உலகு Read More »

அந்தரங்கத்தின் புதிர் மிகுந்த கதை

எஸ்.ஏ. பெருமாள் நெடுங்குருதிக்குப் பிறகு எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம் என்ற இந்தப் பெரிய நாவல் வந்திருக்கிறது கற்பனை செய்து காண முடியாத பழைய நூற்றாண்டுகளின் வாழ்வை, அதுவும் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வை இந்த நாவல் படம் பிடித்துக் காட்டுகிறது. 360  பெரிய பக்கங்களைக் கொண்ட யாமத்தில் நான்கு நூற்றாண்டு வரலாற்றின் வழியே மனித வாழ்வு பயணிக்கிறது. மனிதர்களின் அந்தரங்கத்தின் புதிர் மிகுந்த கதைகளை எழுதுகிறது. இந்திய மரபின் அதிசயங்கள் நிறைந்த ரகசியங்களும் மேற்குலகின் நவீனத்துவ நீரோட்டமும் ஒன்றையொன்று கடந்த …

அந்தரங்கத்தின் புதிர் மிகுந்த கதை Read More »