முதல் நினைவு
இயக்குநர் இங்மர் பெர்க்மென் தான் பிறந்த சில நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகளைத் துல்லியமாக நினைவு கொண்டிருக்கிறார். அதைப் பற்றி தனது சுயசரிதையான The Magic Lantern நூலில் குறிப்பிடுகிறார். எனது நினைவில் மூன்று நான்கு வயதுகளில் நடந்த நிகழ்ச்சிகளே இருக்கின்றன. அதுவும் துல்லியமாக இல்லை. சில தெளிவற்ற காட்சிகள். சில முகங்கள். சில இடங்கள் மட்டுமே இருக்கின்றன. பெர்க்மென் பிறந்தபோது அவரது அம்மா உடல்நலமற்று இருந்த காரணத்தால் பால்புகட்டுவதற்கு தாதியை ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்தத் தாதியின் குறட்டைச் …