தோக்கியோ சுவடுகள்3
இரண்டாம் நாளின் மாலையில் முழுமதி அறக்கட்டளையோடு தொடர்புடைய பல்வேறு துறையைச் சேர்ந்த நண்பர்கள் அனைவருடன் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, அது ஒரு உற்சாகமான சந்திப்பு . நிமித்தம் நாவல், மற்றும் எனது படைப்புகள் பற்றித் துவங்கி மெல்ல கிளைவிட்டு, பிள்ளைகளுக்குத் தூய தமிழ் பெயர் வைப்பது தேவையா, ஆங்கில வழிக்கல்வி சரியானதா, தீவிர இலக்கியம் ஏன் புரியவில்லை, தமிழ் மொழியின் எதிர்காலம் எப்படியிருக்கும், பௌத்தம் ஏன் இந்தியாவில் வீழ்ச்சி அடைந்தது. அம்பேத்காரின் சிந்தனைகள் குறித்த பார்வைகள், …