சந்தையின் இரவுக்காட்சி
பெல்ஜிய ஓவியர் பெட்ரஸ் வான் ஷெண்டல் (Petrus van Schendel) வரைந்த சந்தையின் இரவுக்காட்சி ஓவியங்களில் எரியும் மெழுகுவர்த்திகளுக்கு நடுவே காய்கறி, மீன், மற்றும் பழங்களின் விற்பனை நடக்கிறது. ஒளி எப்போதும் கருணையின், அன்பின் அடையாளமாகவே கருதப்படுகிறது. புனிதர்களின் கையிலிருந்து ஒளி பிறக்கும் காட்சியை ஓவியங்களில் கண்டிருக்கிறேன். ஒளி பேதமறியாதது. ஒளி ஒவ்வொன்றின் தனித்தன்மையை நமக்கு புலப்படவும் புரியவும் வைக்கிறது. ஒளிரும் பொருட்களை, ஒளி படும் விதத்தை யாவரும் விரும்புகிறார்கள். எல்லா சமயங்களும் ஒளியைப் புனிதமாகவே கருதுகின்றன. …