கிராஸ்தமியின் நாய்
பீட்டர் புரூகல் வரைந்த “தி ஹண்டர்ஸ் இன் தி ஸ்னோ,” உலகப்புகழ் பெற்ற ஓவியம். இந்த ஓவியத்தின் தனிச்சிறப்பு வேட்டைக்காரர்கள் வீடு திரும்பும் பனிக்காலக் காட்சியை மிகத்துல்லியமாகப் புரூகல் வரைந்திருப்பதே. களைப்புடன் வீடு திரும்பும் வேட்டைக்காரர்கள் ஒரு புறம், மறுபுறம் தொலைதூரப் பனி மலை. அதன் அடிவாரக் கிராமத்துச் சிறுவர்களின் விளையாட்டு. விவசாயிகளின் வேலைகள். மரக்கிளையில் அமர்ந்துள்ள காகம். மூன்று வேட்டைக்காரர்களும் சோர்வடைந்து வீடு திரும்புகிறார்கள். அவர்களில் ஒருவரிடம் வேட்டையாடிய நரி காணப்படுகிறது. நாய்களும் சோர்ந்திருக்கின்றன. நிக்கலாஸ் …