பிரமிளின் ஒவியங்கள்
கவிஞர் பிரமிள் நவீன கவிதையின் தனிப்பெருமை ஆளுமை என்பதோடு அவர் ஒரு அசாத்தியமான ஒவியர், அவரது கோடுகளில் வெளிப்படும் தெறிப்பும் வலிமையும் விஷேசமானது, அவர் தன்னை வரைந்து கொண்ட ஒவியமும் அவரது நூலின் முகப்புச் சித்திரமாக வந்துள்ள ஒன்றிரண்டு ஒவியங்களையும் தவிர அவரது முழுமையான ஒவியங்கள், சிற்ப வேலைபாடுகள் இதுவரை தனித்துக் காட்சிக்கு வைக்கபடவேயில்லை, அவற்றை காலசுப்ரமணியம் பாதுகாத்து வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன், அவர் வரைந்த ஒவியங்களை நான் பார்த்திருக்கிறேன், வான்கோவின் கோடுகளில் உள்ள தெறிப்பைப் போல …