சினிமா

கதை எனும் மருந்து

சத்யஜித் ரேயின் சிறுகதையை மையமாகக் கொண்டு உருவாக்கபட்ட இந்தி திரைப்படம் The Storyteller . ஆனந்த் மகாதேவன் இயக்கியுள்ளார். அறிவியல்புனைகதைகள் உள்ளிட்ட பல்வேறு சிறுகதைகளை ரே எழுதியிருக்கிறார். விசித்திரமான நிகழ்வுகள். மனிதர்களைச் சுற்றிப் பின்னப்பட்ட அவரது சிறுகதைகள் வங்காளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றவை. ஓவியர் என்பதால் ரே கதாபாத்திரங்களைத் துல்லியமாகச் சித்தரிக்கக் கூடியவர். இந்தக் கதையில் வரும் இருவரும் தனித்துவமானவர்கள். வங்காளத்தில் வாழும் தாரிணி பந்தோபாத்யாயா என்ற அறுபது வயதானவர் ஒரு கதை சொல்லி. முதலாளித்துவத்தை வெறுக்கும் …

கதை எனும் மருந்து Read More »

எவரும் விரும்பாத கடிதம்

 “Wicked Little Letters,” மாறுபட்ட பிரிட்டிஷ் திரைப்படம். தியா ஷாராக் இயக்கிய புதிய நகைச்சுவை திரைப்படம் துப்பறியும் கதை என்றும் சொல்லலாம். ஆனால் துப்பறியப்படும் விஷயமும் பின்புலமும் புதியது. சுவாரஸ்யமானது. 1920களில் கதை நடக்கிறது. லிட்டில்ஹாம்ப்டனில் உள்ள ஒரு வீட்டிற்குத் தபால் வருவதில் துவங்குகிறது. அந்தத் தபாலை பார்த்த மாத்திரம் வீட்டில் உள்ளவர்கள் அலறுகிறார்கள். காரணம் அது ஒரு மொட்டைக்கடிதம். அதுவும் ஆபாச வார்த்தைகளால் எழுதப்பட்ட கடிதம். அதைப் பிரித்துப் படிக்கவே சங்கடப்படுகிறார்கள். இப்படியான கடிதங்கள் தொடர்ந்து …

எவரும் விரும்பாத கடிதம் Read More »

இணையாத தண்டவாளங்கள்

எகிப்திய இயக்குனரான யூசுப் சாஹின் இயக்கிய Cairo Station 1958ல் வெளியான திரைப்படம். முழுப்படமும் கெய்ரோ சென்ட்ரல் ஸ்டேஷனில் எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு நாளில் கதை நடைபெறுகிறது ரயில் நிலையம் என்பது தனியொரு உலகம். பயணிகள் அதை முழுமையாக உணர்வதில்லை. நான் பல நாட்களை ரயில் நிலையத்தில் கழித்தவன் என்ற முறையில் இப்படம் சித்தரிக்கும் உலகை நன்றாக அறிவேன். கெய்ரோ சென்ட்ரல் ரயில் நிலையம், தலைநகரின் இதயம். ஒவ்வொரு நிமிடமும் ஒரு ரயில் புறப்படும் பரபரப்பான ரயில் நிலையமது. …

இணையாத தண்டவாளங்கள் Read More »

தெற்கின் காதல்

தான் விரும்பியவனை அடைய முடியாமல் போன பெண்ணைப் பற்றி எத்தனையோ கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் கான் வித் தி விண்ட் போல நிராகரிப்பின் வலியை, ஆழமாக, அழுத்தமாகத் தனது காலகட்ட சரித்திர நிகழ்வுகளுடன் சொன்ன கதை வேறு எதுவுமிலை. Gone with the Wind திரைப்படத்தை ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு முறை பார்த்துவிடுவேன். எனக்குப் பிடித்த படங்களில் ஒன்று. மார்க்ரெட் மிட்செல் எழுதிய இந்த நாவல் 1936ல் வெளியானது. அவரது சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளிலிருந்து …

தெற்கின் காதல் Read More »

ரகசிய வாக்கெடுப்பு

சென்ற ஆண்டு வெளியான திரைப்படங்களில் சர்வதேச அளவில் அதிகம் பேசப்பட்டது Conclave, எட்வர்ட் பெர்கர் இயக்கியுள்ளார். புதிய போப்பை எப்படித் தேர்வு செய்கிறார்கள் என்ற ரகசிய வாக்கெடுப்பினை விவரிக்கிறது இந்தத் திரைப்படம் இதே கதைக்கருவைக் கொண்டு 2006ல் கிறிஸ்டோஃப் ஷ்ரூவ் இயக்கிய The Conclave படம் வெளியாகியிருக்கிறது. அதனைப் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே பார்த்திருக்கிறேன். அப்படம் சில்வியஸ் ஏனியாஸ் பிக்கோலோமினி என்ற கார்டினல் எழுதிய நாட்குறிப்பின் அடிப்படையில் உருவாக்கபட்டது. அதை விடவும் இன்றைய Conclave வாக்கெடுப்பு முறை …

ரகசிய வாக்கெடுப்பு Read More »

பாரோவின் அரியணை

த டென் கமாண்ட்மெண்ட்ஸ், பென்-ஹர் போன்ற ஹாலிவுட்டின் பிரம்மாண்டமான படங்கள் ஏற்படுத்திய பாதிப்பில் உருவாக்கபட்ட திரைப்படம் பாரோ.  போலந்து நாட்டில் தயாரிக்கபட்ட இப்படம் 1966ல் வெளியானது. மூன்று ஆண்டுகள் பெரும்பொருட்செலவில் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். படத்தில் வரும்  பாலைவனக் காட்சிகளுக்கு மட்டும் ஆயிரம் பேருக்கும் மேலான துணை நடிகர்கள் பயன்படுத்தபட்டிருக்கிறார்கள இப்படத்திற்காக கலை இயக்குநர் 3000 விக்குள் மற்றும் 3000 ஜோடி காலணிகள், கிட்டத்தட்ட 9000 ஆயுதங்கள் மற்றும் 600  பாரம்பரிய ஆடைகளை உருவாக்கியிருக்கிறார். அது போலவே …

பாரோவின் அரியணை Read More »

காதலின் இருவேறு பாதைகள்.

ஆஸ்திரியக் கவிஞர் இங்கேபோர்க் பாக்மென் பற்றிய திரைப்படம் ingeborg-bachmann-journey-into-the-desert. பெண் இயக்குநர் Margarethe von Trotta இயக்கியுள்ளார். 1950-1960களில் புகழ்பெற்ற கவிஞராக விளங்கியவர் பாக்மென். 1973 இல் தனது 47 வயதில் இறந்து போனார்.. சுவிஸ் நாடக ஆசிரியர் மேக்ஸ் ஃப்ரிஷிற்கும் பாக்மேனுக்குமான காதலையும் அவர்களின் உறவில் ஏற்பட்ட விரிசலையும் பற்றிய இத்திரைப்படம் அன்றைய இலக்கிய உலகின் செயல்பாடுகள் மற்றும் கவிஞனின் ஆளுமையைச் சிறப்பாக விவரிக்கிறது. 1958 மற்றும் 1964 க்கு இடையில் கதையின் பெரும்பாலான நிகழ்வுகள் …

காதலின் இருவேறு பாதைகள். Read More »

வெற்றியின் பின்னால்

. 1952ல் வெளியான திரைப்படம் The Bad and the Beautiful. வின்சென்ட் மின்னெல்லி இயக்கியுள்ளார். இது சினிமாவைப் பற்றிய சினிமா. பொதுவாகச் சினிமா எடுப்பதைப் பற்றிய திரைப்படங்கள் வெற்றி பெறுவதில்லை.  Sunset Boulevard, Day for Night 8½ போல அபூர்வமாகச் சில படங்கள் பெரிய வரவேற்பையும் வெற்றியும் பெற்றிருக்கின்றன. அந்த வரிசையில் இடம்பெறும் படமிது. 1950களின் ஹாலிவுட் ஸ்டுடியோ இயங்கும் முறையினையும், அந்தக் காலத் தயாரிப்பாளர்களின் கெடுபிடிகள். மற்றும் நடிகர் நடிகைகளின் ஈகோ, சினிமா …

வெற்றியின் பின்னால் Read More »

துரத்தும் நினைவுகள்

1970களின் மத்தியில் அர்ஜென்டினாவின் சர்வாதிகாரத்தால் நடத்தப்பட்ட உண்மை சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டே இத் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது  1976 முதல் 1983 வரை அந்த நாட்டை ஆண்ட பயங்கரமான இராணுவ ஆட்சியின் போது அரசியல் காரணங்களுக்காக அப்பாவிகள் பலர் கைது செய்யப்பட்டுச் சித்திரவதை செய்து விமானத்தில் ஏற்றிக் கொண்டு போய் நடுக்கடலில் தள்ளிவிட்டு கொல்லப்படுகிறார்கள். அப்படி ஒரு கடற்படை விமானத்தின் விமானியாக இருக்கும் கோப்லிக் இந்த இழிசெயலை செய்யமுடியாது என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார். அவரை ராணுவ சட்டத்தின் கீழ் …

துரத்தும் நினைவுகள் Read More »

வில் ஹென்றியின் அதிர்ஷ்டம்

MacKenna’s Gold திரைப்படத்தை எனது பள்ளி வயதில் பார்த்தேன். 70 MM திரைப்படம். திரை முழுவதும் விரியும் காட்சிகள் தந்த அனுபவம் மறக்க முடியாதது. ஒளிப்பதிவாளர் ஜோசப் மெக்டொனால்ட் சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தின் இசையும் வியப்பூட்டும் சண்டைக்காட்சிகளும் இன்று வரை மனதை விட்டு அகலவேயில்லை. ஆண்டிற்கு ஒருமுறையாவது அந்தப் படத்தைத் திரும்பப் பார்த்துவிடுவேன். கிராண்ட் கேன்யனின் அழகு நிகரில்லாதது.  படத்தின் டைட்டிலில் மெக்கன்னாஸ் கோல்ட்டின் கதை வில் ஹென்றி எனக் குறிப்பிடுவார்கள்.  ஒரு படம் மிகப்பெரிய …

வில் ஹென்றியின் அதிர்ஷ்டம் Read More »