இசையும் வெளிச்சமும்
எத்தனை முறை பார்த்தாலும் வியப்புக் குறையாத படம் சத்யஜித்ரேயின் ஜல்சாகர் (Jalsaghar) . அவரது திரை இதிகாசமாகவே இப் படத்தைக் கருதுகிறேன். ஜல்சாகரில் வரும் இசைக்கூடத்தில் தொங்கும் சரவிளக்குகள் நிலப்பிரபுத்துவத்தின் கடைசி அடையாளமாக விளங்குகின்றன. பணியாளர்களில் ஒருவரான அனந்தா அந்த விளக்குகளைச் சுத்தம் செய்து ஏற்றுவதை விருப்பத்துடன் செய்கிறார். அவரது சிரிப்பு அலாதியானது. ஜமீன்தார் பிஸ்வாம்பரர் இசையினையும் வெளிச்சத்தையும் விரும்புகிறார். இசைக்கூடத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டவுடன் அது வீட்டின் பகுதியாக இல்லாமல் கலையரங்கமாக மாறிவிடுகிறது. இசைகேட்பதற்காக வரும் பார்வையாளர்கள் …