செர்ஜியோ லியோனி.
அகிரா குரசோவாவிற்கு இணையான இன்னொரு திரைப்பட இயக்குனரைச் சொல்ல முடியுமா என்று அமெரிக்காவின் பிரபல இயக்குனர் ஸ்பீல்பெர்க்கிடம் ஒரு நேர்காணலில் கேட்டபோது அவர் ஒரு நிமிசம் கூட யோசிக்காமல் சொன்ன பதில், செர்ஜியோ லியோனி. (Sergio Leone) ஆனால் குரசோவா அறியப்பட்ட அளவு செர்ஜியோ லியோனியின் பெயர் கொண்டாடப்படவில்லை. அவரது படங்களை அறிந்தவர்கள் கூட அதை இயக்கியவர் செர்ஜியோ லியோனி என்று அறிந்திருக்க மாட்டார்கள். காரணம் அவை கலைப்படங்கள் அல்ல. மாறாக …