சினிமா

ஜோதா அக்பர் – விளம்பர உப்புமா

சில ஆண்டுகளுக்கு முன்பாக கலரில் உருமாற்றப்பட்டு வெளியான மொகலே ஆசாம் பார்த்த பிறகு அக்பரையும் மொகலாய வரலாற்றையும் பற்றி அதிகம் வாசிக்க வேண்டும் என்ற உத்வேகம் உருவானது. தேடித்தேடி வாசித்தேன். கறுப்பு வெள்ளையில் இருந்து எப்படிக் கலருக்கு மாற்றினார்கள் என்ற வியப்பு படம் முழுவதுமிருந்தது. இயக்குனர் ஆசிப் முழுப்படத்தையும் கலரில் உருவாக்கவே விரும்பினார். ஆனால் தயாரிப்பாளர்களின் நெருக்கடி படத்தின் இறுதிப்பகுதி மட்டுமே கலரில் படமாக்கபட்டிருந்தது. பிருத்விராஜ் கபூர் அக்பராக நடித்திருந்ததும் மதுபாலாவும் திலீப்குமாரும் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்ததும் …

ஜோதா அக்பர் – விளம்பர உப்புமா Read More »

தெய்வம் தந்த வீடு

இரண்டு பெண்களை பலவருடமாக நான் என் நினைவிலே தேக்கி வைத்திருக்கிறேன். அவர்கள் என் கனவிலும் தனிமையிலும் எப்போதும் சப்தமின்றி இலை அசைவதை போல அசைந்து கொண்டேயிருக்கிறார்கள். ஒன்று புத்தரின் மனைவி யசோதரா. மற்றவள் சங்க இலக்கியத்தின் கவிதாயிணி வெள்ளிவீதியார். அவர் எழுதியதில் நான்கோ ஐந்தோ பாடல்கள் மட்டுமே  சங்க இலக்கியத்தில் வாசிக்க கிடைக்கின்றன. ஆனால் அந்த பாடலின் ஊடாக வெளிப்படும் காமம் தொடர்பான அவளது ஏங்குதலும் உணர்ச்சி வெளிப்பாடும் வெகு அலாதியானது. கையில்லாத ஊமை கண்ணால் காவல் …

தெய்வம் தந்த வீடு Read More »