அனுபவம்

விரும்பி கேட்டவை

வார்த்தை என்ற புதிய இலக்கிய இதழ் வெளியாகி உள்ளது. அதன் வெளியிட்டினை தொடர்ந்து மறுநாள் நண்பர்கள் சந்திப்பு மற்றும் சிறிய விருந்து ஒன்றிற்கு நண்பர் பிகே.சிவகுமார் ஏற்பாடு செய்திருந்தார். அதில் கலந்து கொள்ள நண்பரின் அலுவலகத்திலிருந்து கிளம்பினேன்.வழியில் ஒரு சிறிய தொலைபேசி உரையாடல் காரணமாக வழி சொல்ல மறந்து போய்  வானகஒட்டுனர் என்னை பெருங்குடி பக்கமாக கூட்டிக் கொண்டு போய்விட்டார். எப்படி இவ்வளவு சரியாக வழிமாறி இவ்வளவு தூரம் வந்தோம் யோசிக்கும் போது ஆச்சரியமாக இருந்தது. அந்த …

விரும்பி கேட்டவை Read More »

எறும்பின் கால்கள்

எறும்புகள் எப்போது துங்கும் என்றொரு நாள் என் பையன் என்னிடம் கேட்டான். என்ன பதில் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. இரவானதும் அது துங்கிவிடும் என்று பொய்யாக ஒரு சமாதானம் சொன்னேன். உடனே அவன், இல்லை, ராத்திரியிலும் சமையலறையில் எறும்புகள் போவதைப் பார்த்திருக்கிறேன் என்று சொன்னான்.வேறு வழியில்லாமல் எறும்புகள் எப்போது உறங்கும் என்று எனக்குத் தெரியாது என்றேன். ஏன் தெரியாது என்று திரும்பவும் கேட்டான். கவனித்ததில்லை என்று சற்றே எரிச்சலோடு சொன்னேன். உடனே அவன் ஏன் கவனித்தில்லை …

எறும்பின் கால்கள் Read More »

திரைக்கு பின்னால்

        வலைப்பக்கங்களில் சில அபூர்வமான கட்டுரைகள் வாசிக்க கிடைத்திருக்கின்றன. சமீபத்தில் எழுத்தாளர் ஆபீதீனின் வலைப்பக்கத்தில் நாகூர் படைப்பாளிகள் என்ற பிரிவில் இடம் பெற்றிருந்த இந்தக் கட்டுரையை வாசித்த போது இவ்வளவு நாட்களாக நான் தேடிக் கொண்டிருந்த ஒரு விஷயம் கவனத்தை ஈர்த்தது. கறுப்பு வெள்ளைப் படங்களைப் பார்க்கும் போது அது யாருடைய கதை, யார் வசனம் எழுதியிருக்கிறார்கள் என்று கவனித்துப் பார்ப்பேன். அது போலவே யார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள் என்பதும் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய …

திரைக்கு பின்னால் Read More »

ஊரும் வெயிலும்

தேசிய நெடுஞ்சாலையை விஸ்தாரணப்படுத்து பணி சாலையோரம் உள்ள கிராமங்கள், நகரங்களின் தினசரி வாழ்வில் நிறைய மாற்றங்களை உருவாக்கியிருப்பதை இந்த முறை நேரில் கண்டேன். என்ஹெச் 7 எனப்படும் கன்யாகுமரி தேசிய நெடுஞ்சாலை அகலப்பாதையாக விரிவுபடுத்தபட்டிருக்கிறது. நேற்றுவரை ஒடுங்கி இருந்த சாலையோரக் கிராமங்கள் இன்று சாலையைப் பார்த்து திரும்பிக் கொண்டுள்ளன. மறுபக்கம் சாலையோரம் இருந்த வீடுகள், கிணறுகள். தோட்டங்கள் யாவும் காலி செய்யப்பட்டு அவசர அவசரமாக வணிக மையங்களுக்கான வேலைகள் நடைபெறுகின்றன.சாலை மாற்றம் என் ஊரையும் புரட்டிப்போட்டிருக்கிறது. ஆறேழு …

ஊரும் வெயிலும் Read More »