அறிவிப்பு

அஞ்சலி

அன்பிற்குரிய நண்பரும் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகருமான விவேக் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இருபத்தைந்து ஆண்டுகளாக அவரை அறிவேன். சிறந்த பண்பாளர். அவரது மறைவு மிகுந்த துயரமளிக்கிறது. அவருக்கு எனது கண்ணீர் அஞ்சலி .

மை டியர் செகாவ்

எனது மகன் ஹரி பிரசாத் இயக்கிய மை டியர் செகாவ் குறும்படம் பூனேயில் நடைபெற்ற சர்வதேசக் குறும்படப் போட்டியின் இறுதிச் சுற்றில் கலந்து கொண்டு சிறப்புப் பரிசை பெற்றுள்ளது. எழுத்தாளர் ஆன்டன் செகாவைத் தீவிரமாக வாசிக்கும் ஒரு வாசகரின் வாழ்வினைச் சொல்லும் இந்தத் திரைப்படம் கவனம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஹரி பிரசாத் மற்றும் அவனது குழுவினர்களுக்கு எனது அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்

தெலுங்கில்

 ” எம்பாவாய்”  என்ற எனது சிறுகதையின் தெலுங்கு மொழியாக்கம் “neccheli.com என்ற மின் இதழில் வெளியாகி இருக்கிறது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் கௌரி கிருபானந்தன். அவருக்கு எனது மனம் நிரம்பிய நன்றி இணைப்பு

சென்னையும் நானும் -2

சென்னையும் நானும் காணொளித் தொடரின் இரண்டாம் பகுதி ஏப்ரல் 16 முதல் துவங்குகிறது. வாரம் வெள்ளிதோறும் இந்தக் காணொளித் தொடர் வெளியாகும். தேசாந்திரி யூடியூப் பக்கத்தில் இதனைக் காணலாம்

அன்பு மொழி

நேற்று எனது பிறந்த நாள். இந்நாளில் எனக்குத் தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் முகநூலிலும் வாழ்த்து தெரிவித்த நண்பர்கள். அன்பர்கள். வாசகர்கள் அனைவருக்கும் மனம் நிரம்பிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் குடும்பத்தில் ஒருவரது பிறந்த நாளைக் கொண்டாடுவது போல வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. உங்கள் நேசமும் வாழ்த்துக்களும் தான் என்னைத் தொடர்ந்து இயங்க வைக்கின்றன. இத்தனை நல்ல உள்ளங்களின் அன்பைப் பெற்றிருக்கிறேன் என்பது எனது பேறு. அயல்நாட்டிலிருந்து மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் அழைத்துப் பேசி வாழ்த்து …

அன்பு மொழி Read More »

சென்னையும் நானும் – சீசன் 2

சென்னையும் நானும் காணொளித் தொடர் மிகுந்த வரவேற்பு பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்ற ஆண்டில் பெருந்தொற்றுக்கால ஊரடங்கின் காரணமாக அதைத் தொடர முடியாமல் போனது. தற்போது மீண்டும் அதன் இரண்டாம் பகுதி ஒளிபரப்பாக உள்ளது. இந்தப் பகுதியில் சென்னையில் நான் சந்தித்த எழுத்தாளர்கள், சினிமா உலக அனுபவங்கள். மற்றும் மறக்கமுடியாத கலை நிகழ்வுகள். ஆளுமைகள். சென்னையின் வரலாறு குறித்த விஷயங்கள் இடம்பெற உள்ளன இந்தத் தொடரை உருவாக்குவது எனது மகன் ஹரி பிரசாத் , இதனை ஒளிப்பதிவு …

சென்னையும் நானும் – சீசன் 2 Read More »

நூல் பேசுவோம்

மஞ்சுநாத் எழுதியுள்ள கர்னலின் நாற்காலி குறித்த சிறிய அறிமுகம். *** நூல் பேசுவோம் – கர்னலின் நாற்காலி பூங்காவிற்குள் நுழைந்தவுடன்  ஊஞ்சலில்  அமர்ந்தாடும் சிறுமியின் மகிழ்ச்சிக்கு ஒப்பீடாக சொல்லியிருக்கலாம் கை நிறைய கலர் மிட்டாய்கள்  வைத்திருக்கும் சிறுவனின்  கொண்டாட்டத்திற்கு  ஈடாக சொல்லியிருக்கலாம் ஆபூர்வ வைரக்கற்கள் கண்டடைந்த  பூரிப்பை முகத்தில் காட்டியிருக்கலாம், வியாபாரியாக இருந்திருந்தால் என்றைக்குமில்லாமல் பாதி பூக்களுடன் திரும்பி செல்லும் பூக்காரம்மாவிற்கு இன்று ஒரே ஒரு மனிதன் முழுவதையும் சொன்ன விலைக்கு பேரம் பேசாமல் வாங்கி கொண்டால், …

நூல் பேசுவோம் Read More »

சுபமங்களா இதழில்

சுபமங்களா இதழில் வெளியான எனது சிறுகதைகள் குறித்து வண்ணநிலவன் எழுதியுள்ள இந்தக் குறிப்பு சுபமங்களா நாட்களை நினைவுபடுத்தியது. கோமலின் அன்பு மறக்கமுடியாதது. சுபமங்களா இதழின் பங்களிப்பு பற்றி வெளியான சிறப்பு மலரில் இந்தக் கட்டுரையை வண்ணநிலவன் எழுதியிருக்கிறார். சுபமங்களா இதழ்கள் யாவும் இணையத்தில் வாசிக்க கிடைக்கிறது. https://www.subamangala.in/