சிங்கப்பூர் செல்கிறேன்
சிங்கப்பூரில் நடைபெறும் சிறுகதைப் பயிலரங்கில் கலந்து கொள்வதற்காக இன்றிரவு செல்கிறேன், சிங்கப்பூரில் சந்திக்க விரும்பும் நண்பர்கள் ஆதிமூலம் 81500707 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் பத்தாம் தேதி சென்னை திரும்புகிறேன் ***
சிங்கப்பூரில் நடைபெறும் சிறுகதைப் பயிலரங்கில் கலந்து கொள்வதற்காக இன்றிரவு செல்கிறேன், சிங்கப்பூரில் சந்திக்க விரும்பும் நண்பர்கள் ஆதிமூலம் 81500707 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் பத்தாம் தேதி சென்னை திரும்புகிறேன் ***
எனது இணையதளத்தை யாரோ ஹேக் செய்து வைரஸைப் புகுத்தியிருக்கிறார்கள், அதனால் கடந்த இரண்டு நாட்களாக இணையதளம் முடங்கிப்போனது இது குறித்து நிறைய நண்பர்கள், வாசகர்கள், தொலைபேசியிலும் மெயிலிலும் தொடர்ந்து சுட்டிக்காட்டியபடியே இருந்தது மிகவும் நெகிழச் செய்தது. தற்போது இணையதளம் சரிசெய்யப்பட்டு விட்டது இதற்கு உறுதுணை செய்த லீலைராஜன் மற்றும் அவரது தொழில்நுட்பக் குழுவினர்களுக்கு நன்றி
தங்கமீன் பதிப்பகம் சார்பில் நடைபெற உள்ள சிறுகதைப் பயிலரங்கில் கலந்து கொள்வதற்காக ஏப்ரல் 6 முதல் 10 வரை நான்கு நாட்கள் சிங்கப்பூர் செல்ல இருக்கிறேன் நண்பர் பாலு மணிமாறன் இதனை ஒருங்கிணைக்கிறார். ஏப்ரல் 7 மற்றும் 8 இரண்டு நாட்களும் சிறுகதைப் பயிலரங்கு நடைபெறுகிறது.
தானே புயலால் பாதிக்கபட்ட கடலூர் மாவட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்காக விகடன் நிறுவனம் பொதுமக்களிடமிருந்து நிதிவுதவி பெற்று மறுசீரமைப்புப் பணிகளை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது, இதன் மூலம் தானொரு சமூகப்பொறுப்புமிக்க ஊடகம் என்பதை விகடன் நிரூபணம் செய்திருக்கிறது, அதற்காக விகடன் நிறுவனத்திற்கும், துணைநிற்கும் ஆசிரியர் குழுவினர் அனைவருக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தானே புயலின் மறுசீரமைப்புப் பணிகளுக்கு நிதி திரட்ட ஒரு மாபெரும் ஒவியக்கண்காட்சி ஒன்றினை சென்னை லலித்கலா அகாதமியில் விகடன் நடத்திவருகிறது, …
அ.முத்து கிருஷ்ணன் தமிழில் எழுதி வரும் இளம் படைப்பாளிகளில் முக்கியமானவர். சமூகம், சுற்றுப்புறச்சுழல், மனித உரிமைகள், விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், உலகமயம் என பல்வேறு தளங்களில் எழுதிவருகிறார். நீயா நானா, புதுப் புது அர்த்தங்கள் என பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து காத்திரமானவிவாதங்களை மேற்கொண்டு வருபவர். எழுத்தாளராக மட்டுமின்றி ஒரு தீவிரமான சமூக செயல்பாட்டாளராக தொடர்ந்து தனது கள ஆய்வுகளுக்காக இந்தியாவெங்கும் சுற்றிவருபவர். கடந்த ஆண்டு இவர் புதுதில்லியில் இருந்து தரை வழியாக 10 ஆயிரம் கிலோ …
உலக புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக பிப்ரவரி 25 முதல் ஒருவார காலம் டெல்லியில் இருக்கிறேன், பிப்ரவரி 26 மாலை 6 மணிக்கு டெல்லித் தமிழ்சங்கத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில் பேசுகிறேன், இலக்கிய நண்பர்களுடன் கலந்துரையாடல் ஒன்றினையும் ஒழுங்கு செய்யத் திட்டமிட்டிருக்கிறேன், சந்திக்க விருப்பமான நண்பர்கள் தங்களது அலைபேசி எண்ணுடன் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும் •••
இந்திய பாகிஸ்தான் பிரிவினையைப் பற்றிய குஷ்வந்த் சிங்கின் நாவலை மையமாகக் கொண்ட திரை வடிவமிது. TRAIN TO PAKISTAN https://youtu.be/BQQDUxvnnbQ https://youtu.be/uB-OmwqUd6s https://youtu.be/3ATppopcITE https://youtu.be/eAgZKq0dBAo https://youtu.be/lyJJKiGlln0 https://youtu.be/xP_L7ioe6vs ** தாகூர் குறித்த ரேயின் மிகச்சிறந்த ஆவணப்படம் Rabindranath Tagore by Satyajit Ray https://vimeo.com/3838865 ** இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர் மணிகௌல் இயக்கிய இசை சார்ந்த ஆவணப்படம் Siddeshwari – Mani Kaul https://youtu.be/u3wlbjGgIes Dhrupad – a film by Mani Kaul https://youtu.be/b2Hi1KPe6Bc …
எதிர்பாராத சொந்தக் காரணத்தால் இலங்கைப் பயணம் மேற்கொள்ள இயலவில்லை, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் சந்திக்க விரும்பிய நண்பர்களும் என்னால் ஏற்பட்ட இந்தச் சிரமத்தினை மன்னிக்கவும். •••
பிரெஞ்சு இந்தியக் கலை இலக்கிய உறவு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க நாளை பாண்டிச்சேரி செல்கிறேன், பிப்ரவரி ஆறு காலை பாண்டிச்சேரி பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெறும் ஆசிரியர்களுக்கான அடிப்படைக் கல்வி குறித்த பயிலரங்கில் கலந்து கொள்ள இருக்கிறேன் •• பிப்ரவரி 13 முதல் 19 வரை இலங்கைப் பயணம் செல்ல இருக்கிறேன், கொழும்பில் நடைபெற உள்ள ஈழத்து சோமுவின் நினைவுக் கருத்தரங்கில் கலந்து கொள்ள இருக்கிறேன் •• என்னுடைய உறுபசி மற்றும் துணையெழுத்தின் ஆங்கிலப்பதிப்பு தயாராகிக் கொண்டிருக்கிறது, அதன் …
கனடா தேசத்தின் இலக்கியத்தோட்டம் வழங்கும் சர்வதேச இலக்கிய விருதான இயல்விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்பட இருப்பதை முன்னிட்டு உயிர்மை சென்னையில் பிரம்மாண்டமான ஒரு பாராட்டு விழாவினை ஏற்பாடு செய்துள்ளது இந்த விழா தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் பிப்ரவரி 2ம் தேதி வியாழக்கிழமை மாலை ஆறுமணிக்கு நடைபெற இருக்கிறது இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார். இந்த விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து, இந்திரா பார்த்தசாரதி, பேராசிரியர் ஞானசம்பந்தம், …