அறிவிப்பு

விருது ஏற்புரை

மே 5ம் நாள் மும்பையில் உள்ள ரபீந்திர நாட்டிய மந்திரில் எனக்குத் தாகூர் விருது வழங்கப்பட்டது, இந்த விருதினை மராத்தியின் முக்கிய எழுத்தாளரும் இந்திய திட்டகமிஷன் உறுப்பினருமான நரேந்திர ஜாதவ் வழங்கினார், இவர் தாகூர் குறித்து முக்கியமான புத்தகங்களை மூன்று புத்தகங்களை எழுதியிருக்கிறார், தாகூரின் முக்கிய படைப்புகளை மராத்தியில் மொழியாக்கம் செய்திருக்கிறார், இவர்களுடன் கொரிய அரசின் பன்னாட்டுஉறவுச் செயலர்  Seo-hang Lee, சாகித்ய அகாதமியின் செயலாளர் திரு, அக்ரஹாரா கிருஷ்ணமூர்த்தி. பிரபலநாடக நடிகர் பரூக் ஷேக், நோபல் …

விருது ஏற்புரை Read More »

மும்பைத் தமிழ்சங்க விழா

தாகூர் விருது பெறுவதற்காக மே ஐந்தாம் தேதி காலை மும்பை வருகிறேன், விழா தாதரில் உள்ள ரபீந்திர நாட்டிய மந்திரில் நடைபெற உள்ளது மும்பையில் ஐந்தாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை இருக்கிறேன் மே 8ம் தேதி மும்பை தமிழ்சங்கம் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளது சியோன் தமிழ் சங்கத்தில் காலை பத்துமணிக்கு  எப்போதுமிருக்கும் கதை – தமிழ் இலக்கியத்தின் மரபும் நவீனமும் என்ற தலைப்பில் பேச இருக்கிறேன் மும்பையில் உள்ள வாசகர்கள் மற்றும் நண்பர்கள் …

மும்பைத் தமிழ்சங்க விழா Read More »

என்றும் சுஜாதா

இன்றுள்ள இளம்வாசகருக்கு எழுத்தாளர் சுஜாதாவின் பன்முகத்தன்மையை அடையாளப்படுத்தும் விதமாக நான் அவரது படைப்புகளில் இருந்து தேர்வு செய்து என்றும் சுஜாதா என்ற புத்தகம் ஒன்றினைத் தொகுத்திருக்கிறேன் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளிலிருந்து சிறந்ததைத் தேர்வு செய்து தனியே  ரீடர் என்று  தொகைநூலாகக் கொண்டுவருவது உலகெங்கும் ஒரு மரபாக உள்ளது, அதிலிருந்து மாறுபட்டு ஒரு எழுத்தாளரின் ஆளுமையை, பன்முகத்தன்மையை முதன்மைப்படுத்தும் விதமாக நான் இந்தத் தொகைநூலை உருவாக்கியிருக்கிறேன், எழுத்து, வாழ்க்கை, கணிப்பொறி, சினிமா, ஒவியம், விஞ்ஞானம், ஹைக்கூ, புதுக்கவிதை, ஆன்மீகம், …

என்றும் சுஜாதா Read More »

நன்றி

எனக்குத் தாகூர் விருது கிடைத்துள்ளதற்கு நிறைய நண்பர்கள் போனிலும்  மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்தபடியே இருக்கிறார்கள், மூன்று நாளில் 1374 வாழ்த்து மின்னஞ்சல்கள் குவிந்துவிட்டதைக் கண்டு மிகவும் நெகிழ்ந்து போனேன், தங்களுக்கே இந்த விருதுகிடைத்துள்ளது போல உளமாற மகிழும் நல்ல உள்ளங்களோடு சேர்ந்து செயல்படுவது மிகுந்த சந்தோஷம் தருகிறது, என்மீதும், என் எழுத்தின் மீதும் அன்பு கொண்டுள்ள உங்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் கடந்த ஒரு வாரகாலமாகவே பயணத்தில் இருந்த காரணத்தால் இணையத்தில் நேரம் …

நன்றி Read More »

தாகூர் இலக்கிய விருது

இந்தியாவின் மிக முக்கிய விருதான தாகூர் இலக்கிய விருது எனக்கு கிடைத்துள்ளது, இந்த விருதை கொரிய அரசாங்கம் சார்பில் சாம்சங் நிறுவனம்  சாகித்ய அகாதமியோடு இணைந்து ஏற்படுத்தியுள்ளது. முதன்முறையாக தமிழுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது, அதைப் பெறுவதில் மிகுந்த சந்தோஷமடைகிறேன், இந்த விருது குறித்த அறிவிப்பு ** தாகூர் இலக்கிய விருது மகாகவி தாகூரின் 150வது ஆண்டினை ஒட்டி இந்திய இலக்கியங்களைக் கௌரவிக்கும் விதமாக கொரிய அரசாங்கம் சார்பில் சாம்சங் நிறுவனம்  சாகித்ய அகாதமியோடு இணைந்து தாகூர் இலக்கிய …

தாகூர் இலக்கிய விருது Read More »

அறிவிப்பு

கடந்த பத்து நாட்களாக  என் பையன்களுடன் கோடைப்பயணத்தில் இருந்த காரணத்தால் இணையத்தில் புதிதாக எதையும் எழுத இயலவில்லை, இன்று காலையில் தான் சென்னை திரும்பினேன், ஏப்ரல் 13 அன்று எனது பிறந்தநாளை நினைவில் வைத்திருந்து வாழ்த்து அனுப்பிய இணைய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் புழுதியும் வெக்கையும் வேம்பின் நிழலும் மகாமௌனமும்  நிரம்பிய கிராமங்கள் சிறுநகரங்களில் சுற்றியலைந்து திரும்புகையில் இன்னமும் எழுத வேண்டியது நிறைய இருப்பது தெரிகிறது, வெயில் கொதிக்கிறது, தாங்கமுடியவில்லை என்ற பலரின் முணுமுணுப்புக்குரலையும் …

அறிவிப்பு Read More »

அறிவிப்பு

புதிய வாசகர்களின் விருப்பத்திற்காக இணையத்தில் வேறு வேறு தளங்களில் வாசிக்க கிடைக்கின்ற எனது சிறுகதைகளை  ஒருங்கே தொகுத்துத்  தர முயற்சிக்கிறேன்,  ஏதாவது இணையதளங்களில் எனது சிறுகதைகள் வெளியாகி இருந்தால் எனக்குச் சுட்டிக்காட்டவும் •••

சில இணைப்புகள்

சாப்ளினின் முதல்படம் சாப்ளின் நடித்த முதல் திரைப்படம், மிக அரிய காணொளி. கீஸ்ட்டன் ஸ்டுடியோதான் ‘மேக்கிங் எ லிவிங்’ திரைப்படத்தைத் தயாரித்தது. Charlie Chaplin in Making a Living (1914) https://www.youtube.com/watch?v=2Mntjb7ShuI’ •• காந்தி பேசுகிறார் மகாத்மா காந்தியின் அரிய காணொளி Mahatma Gandhi Talks- First Indian Talking Movie https://www.youtube.com/watch?v=2GgK_Nq9NLw •• ஷியாம் பெனகலின் நேர்காணல் உரை ஐந்து பகுதிகளாக உள்ள பிரபலத் திரை இயக்குனர் ஷியாம் பெனகலின் விரிவான நேர்காணல், Top …

சில இணைப்புகள் Read More »

என்னம்மா தோழி

காலைப்பனி என்ற படத்தில் சதீஷ ராமலிங்கம் இசையமைத்த என்னம்மா தோழி என்ற பாடலை சில வாரங்களாகவே அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறேன், கேட்கக் கேட்கப் பரவசமாகவே இருக்கிறது, சமீபமாக நான் கேட்ட மிகச்சிறந்த பாடல் இதுவே, ராஜேஷ் செல்வா இயக்கிய இந்தப் பட்ம் சென்ற ஆண்டு வெளியானது என்கிறார்கள், நான் அதைப் பார்க்கவில்லை, ஆனால் பாடல்கள் அற்புதமாக இருக்கின்றன. தற்செயலாக ஒரு நண்பரின் காரில் இந்தப் பாடலை கேட்டதில் இருந்து அதைத்தேடிப்பெற்று கேட்க ஆரம்பித்தேன், இந்தப்பாடலை எழுதியிருப்பவர் சசிக்குமார் …

என்னம்மா தோழி Read More »