அறிவிப்பு

பயணியின் சிறகுகள்

அஹ்மது யஹ்யா அய்யாஷ் இலக்கற்ற பயணி நூல் பற்றிய விமர்சனம் எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துக்களுக்கு மனதை கிறங்கடிக்கும் ஆற்றல் உண்டு. எஸ்ரா வின் எழுத்துக்கள் வெறுமெனக் காகிதங்களில் அச்சிடப்பட்ட எழுத்துக்களின் குவியல் அல்ல. அவை தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களால் கோர்க்கப்பட்ட அழகான சரடுகள். அப்படித்தான் இலக்கற்ற பயணி எனும் பயணம் குறித்த எஸ்ரா வின் கட்டுரைகளின் தொகுப்புகள் அடங்கிய நூல். பயணம் குறித்து எல்லோருக்கும் ஓர் கனவு உண்டு, எண்ணங்கள் உண்டு, திட்டங்கள் உண்டு. அவையெல்லாம் பயணங்களே அல்ல என்கிறார் …

பயணியின் சிறகுகள் Read More »

அண்டா ஹால்ட்

வங்காளத்தின் புகழ்பெற்ற ராமபத சௌதுரி எழுதிய பாரதநாடு என்ற சிறுகதை முக்கியமானது. இந்தக் கதை வங்கச்சிறுகதைகள் தொகுப்பில் உள்ளது. இதனை சொல்வனம்  இணைய இதழில் மீள்பிரசுரம் செய்திருக்கிறார்கள். •• பாரத நாடு ராமபத சௌதுரி தமிழாக்கம் : சு.கிருஷ்ணமூர்த்தி. ராணுவக் குறியீட்டின்படி அந்த இடத்தின் பெயர் BF332.  அது ஒரு ரயில்வே ஸ்டேஷன் அல்ல. அங்கே பிளாட்ஃபாரமும் இல்லை, டிக்கெட் கௌண்டரும் இல்லை. திடீரென்று ஒரு நாள் அங்கே ரயில் தண்டவாளத்தை ஒட்டி பளபளக்கும் முள்வேலி போடப்பட்டது. …

அண்டா ஹால்ட் Read More »

அறியாத ரகசியம்

அப்துல் ரஹீம் உங்களுடைய ஞாபகக் கல் என்ற சிறுகதையை படித்தேன். இந்தச் சிறுகதை பகலின் சிறகுகள் தொகுப்பில் உள்ளது. அந்த அனுபவத்திலிருந்து சில எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. முக்கியமாக அந்த அம்மா கல்லோடு உரையாடுவது. ஒரு மிகப்பெரிய அதிசயத்தை அவருடைய குடும்பம் சாதாரணமாகக் கையாள்வது . நான் ஒரு விஞ்ஞானி என்று சொன்னாலும் தத்துவத்தின் வழியே ஆன்மீகத்தின் வழியே அந்த அதிசயத்தை நிகழ்த்துவது. பகல் பொழுதுகளை அவள் கோர்க்கும் மலர்களாக …

அறியாத ரகசியம் Read More »

தொடர் பயணங்கள்

கடந்த மாதம் 25 முதல் அக்டோபர் 10 வரை இடைவிடாத பயணம். அன்றாடம் இருநூறு முதல் நானூறு கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்திருக்கிறேன். அதுவும் மலேசியா பயணம் முடித்துவிட்டுச் சென்னை திரும்பிய மறுநாள் புத்தகக் கண்காட்சி நிகழ்வுகளுக்காகப் பயணம். பயணத்தின் ஊடே மழையில் நனைந்து காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டது. ஆயினும் ஒத்துக் கொண்ட நிகழ்வுகளைத் தவிர்க்க இயலவில்லை. விருதுநகரில் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொண்ட போது முழுமையான ஓய்வு தான் உங்களுக்கான மருந்து …

தொடர் பயணங்கள் Read More »

இளையராஜா திரைப்படம்.

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் பணியாற்றுகிறேன். அதன் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் மூன்று மாதங்களுக்கு முன்பாக அழைத்திருந்தார்.  திரைப்படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் பணியாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.  அதைத் தொடர்ந்து  திரைக்கதை உருவாக்கப் பணியில் இணைந்து கொண்டேன். இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைபுரத்திற்கு இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர்களுடன் சென்று அவரது சொந்த வீடு, அவர் படித்த பள்ளிக்கூடம், அவர் விளையாடி மகிழ்ந்த இரட்டை ஆலமரம்  உள்ளிட்ட பல்வேறு இடங்களைக் கண்டோம். அத்துடன் ஊர்மக்களைச் …

இளையராஜா திரைப்படம். Read More »

விருதுநகரில்

விருதுநகரில் எனது நண்பரும் தொழில் அதிபருமான அம்பாள் முத்துமணி தனது அம்பாள் ராமசாமி புஷ்பமணி அறக்கட்டளை சார்பில் சிறுகதைப் போட்டி ஒன்றினை நடத்துகிறார் இதன் பரிசளிப்பு விழா அக்டோபர் 6 மாலை விருதுநகர் அம்பாள் ராமசாமி புஷ்பமணி அரங்கில் நடைபெறுகிறது இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பரிசுகளை வழங்குவதுடன் வரலாற்றின் வெளிச்சம் என்ற தலைப்பில் உரையாறறுகிறேன்.

திருச்சி புத்தகத் திருவிழாவில்

திருச்சி நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் அக்டோபர் 4 வெள்ளிக்கிழமை மாலை மகத்தான இந்திய நாவல்கள் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன். திருச்சி புத்தகத் திருவிழாவில் அரங்கு எண் 26 மற்றும் 27ல் எனது அனைத்து நூல்களும் விற்பனைக்கு கிடைக்கின்றன.

மலேசியப் பயணம்

ஒரு வார கால மலேசியப் பயணம் முடித்து இன்று சென்னை திரும்பினேன். பினாங்கு துவங்கி கூலிம்,  சுங்கைசிப்புட்  ரிஞ்சிங், மலாக்கா என ஐந்து நிகழ்ச்சிகள். கோலாலம்பூரிலிருந்து பினாங்கு வரையான நீண்ட தூரக் கார் பயணம். அதுவும் மழையோடு பயணம் செய்தது மறக்க முடியாத அனுபவம். எல்லா நிகழ்ச்சிகளிலும் அரங்கு நிரம்பிய கூட்டம். எனது மலேசியப் பயணத்தை நண்பர் பி.எம். மூர்த்தி சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தார். இவர் மலேசிய கல்வி அமைச்சகத்தின் தேர்வு வாரிய அதிகாரியாகப் பணியாற்றியவர். சிறந்த கல்வியாளர். …

மலேசியப் பயணம் Read More »

ரொட்டியில் எழுதப்பட்ட கவிதை

பிரிட்டிஷ் கவிஞர் வெர்னான் ஸ்கேன்னல் (Vernon Scannell ) ரொட்டியில் கவிதை எழுதும் கவிஞரைப் பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறார். காகிதத்திற்குப் பதிலாக ரொட்டியில் ஒருவர் கவிதை எழுத விரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதில் கவிதை உண்ணப்படும் பொருளாக மாறுகிறது.  ரொட்டியில் எழுதுவதற்கான மையாக ஜாமை மாற்றுகிறார் கவிஞர். அதுவும் விரலால் ஜாமைத் தொட்டு ரொட்டி மீது சிறிய கவிதை எழுதுவதாகச் சொல்கிறார். கவிதை எழுதுவது குழந்தை விளையாட்டு போல மாறுகிறது.  ரொட்டி மீது எழுதப்பட்ட கவிதையை …

ரொட்டியில் எழுதப்பட்ட கவிதை Read More »