கலையின் மீதான பசி
ஃபிரான்ஸ் காஃப்காவின் பட்டினிக்கலைஞன் சிறுகதையில் சர்க்கஸ் ஒன்றில் ஒரு மனிதன் கூண்டிற்குள் அடைக்கப்படுகிறான். அவனொரு பட்டினிக்கலைஞன். அதாவது பணம் செலுத்தும் பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காகப் பட்டினி கிடப்பவன். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அவனைப் போன்ற பட்டினிக்கலைஞர்கள் நிறைய இருந்தார்கள். அவர்கள் பல்வேறு நகரங்களில் காட்சி நடத்தியிருக்கிறார்கள். பொதுவாகத் திருவிழா, கண்காட்சியிலோ, அல்லது அரங்கம் ஒன்றிலோ இவர்களின் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதற்குக் கட்டணம் உண்டு. இவர்கள் அதிகப் பட்சம் நாற்பது நாட்கள் வரை பட்டினி கிடப்பதுண்டு. இந்த நிகழ்ச்சிக்காகப் பெரிய …