இலக்கியம்

விநோதமான மனிதர்களின் உலகம்

  இர.மௌலிதரன் 25 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து இலக்கிய உலகில் கதைகள் எழுதும் ஒரு எழுத்தாளருக்கு இந்த 2025-லும் எழுதுவதற்கு என்ன இருந்துவிட போகிறது ? என்ற கேள்வி கொடுத்த ஆர்வத்தில் தான் இந்த தொகுப்பை தேர்ந்தெடுத்தேன் . ஒவ்வொரு முறையும் ஒரு அனுபவமிக்க எழுத்தாளரின் சமகால படைப்பை வாசிக்கும்பொழுது அ .முத்துலிங்கம் அவர்களின் ஒரு வரி எங்கிருந்தாலும் வந்து என் மனதில் அமர்ந்துவிடும் . 100 நாற்காலிகளை செய்த ஒரு தச்சனுக்கு 101 ஆவது நாற்காலி செய்வது …

விநோதமான மனிதர்களின் உலகம் Read More »

காஃப்காவின் நிழல்

பெஞ்சமின் பாலிண்ட்டின் Kafka’s Last Trial: The Case of a Literary Legacy புத்தகத்தைப் படிக்கும் போது அது காஃப்காவின் விசாரணை நாவலைப் போலவே இருப்பதை உணர முடிகிறது. காஃப்காவின் படைப்புகள் யாருக்குச் சொந்தம் என்பது குறித்த நீதிமன்ற வழக்கு பற்றிய இப்புத்தகம் ஜெருசலேமில் ஒரு கோடை காலத்தின் காலை நேரத்தில் முற்றிலும் கறுப்பு நிறத்தில் உடையணிந்த 82 வயதான ஈவா ஹோஃப், இஸ்ரேலிய உச்ச நீதிமன்றத்தின் வளைந்த மர பெஞ்சில் தனது கைகளைப் பற்றிக் …

காஃப்காவின் நிழல் Read More »

புதிய மொழி

தாவோ கோவிலுக்குச் செல்வது எப்படி என்றொரு ஆங்கிலக் கவிதை தொகுப்பை மலையாள கவிஞர் சச்சிதானந்தன் வெளியிட்டுள்ளார். இருமொழிகளில் வெளியாகியுள்ள இந்தத் தொகுப்பை INTERNATIONAL POETRY NIGHTS IN HONG KONG வெளியிட்டுள்ளது. இதில் மிகச்சிறந்த கவிதைகள் இடம்பெற்றுள்ளன இந்தத் தொகுப்பின் முதல்கவிதை திக்குவாய் பற்றியது. மிக அழகாக எழுதியிருக்கிறார். இந்தக் கவிதை திக்குவாயை ஒரு குறீயிடாக மாற்றுகிறது. திக்குவாய் குறித்த கேலிகள். அவமானங்களைப் புறந்தள்ளி அதனைப் புதியதொரு மொழியாக அறிவிக்கிறது. •• திக்குவாய் என்பது ஒரு குறையல்ல. …

புதிய மொழி Read More »

போரும் காதலும்

ஜெர்மானிய எழுத்தாளர் எரிக் மரியா ரெமார்க்கின் A Time to Love and a Time to Die நாவல் போரின் துயர நாட்களை விவரிக்கிறது. ஹெமிங்வேயின் A Farewell to Arms நாவலைப் போன்ற கதைக்களம் கொண்டது. இதில் போர் முனையிலிருந்து வீடு திரும்பி வரும் சிப்பாய் கிரேபரின் காதலும், பெற்றோரை தேடும் அவனது இடைவிடாத பயணமும் விவரிக்கபடுகிறது. போரை முதன்மைப்படுத்திய ஐரோப்பிய நாவல்களுக்கும் ரஷ்ய நாவல்களுக்கும் நிறைய வேறுபாடிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளின் போர் நாவல்களில் …

போரும் காதலும் Read More »

அலமாரியில் உறங்குகிறவன்.

போலந்து எழுத்தாளர் ஸ்லாவோமிர் மிரோசெக் (Slawomir Mrozek) கதை ஒன்றில் ஒருவன் தனது அறையில் உள்ள படுக்கை, பீரோ, மேஜை மூன்றும் நீண்டகாலமாக ஒரே இடத்தில் இருப்பதை நினைத்துச் சலிப்படைகிறான். அறையில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என விரும்பி அலமாரியை நகர்த்தி வேறு பக்கம் வைக்கிறான். படுக்கையை அந்தப் பக்கம் திருப்புகிறான். மேஜையை ஒரமாக நகர்த்திவிடுகிறான். இந்த மாற்றம் பிடித்திருக்கிறது. ஆனால் சில நாட்களில் மீண்டும் அறையின் தோற்றம் சலிப்பை உருவாக்குகிறது. இந்த முறை அறையின் …

அலமாரியில் உறங்குகிறவன். Read More »

காலத்தால் அழியாத உண்மை

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான சிக்ரிட் அன்ட்செட் எழுதிய கிறிஸ்டின் லாவ்ரான்ஸ்டேட்டர் நாவல் ஆயிரம் பக்கங்களுக்கும் மேலானது. மூன்று தொகுதிகளாக வெளியாகியுள்ளது. நாவலில் வரும் கிறிஸ்டியன், சிக்ரிட்டின் மாற்றுவடிவம் போலவே சித்தரிக்கபடுகிறாள். சிக்ரிட்டின் சொந்த வாழ்க்கை அவரது நாவலை விடவும் திருப்பங்களைக் கொண்டது. துயரத்தால் நிரம்பியது. 14ம் நூற்றாண்டில் கதை நடக்கிறது. மலைகிராமம் ஒன்றில் வாழும் லாவ்ரான்ஸின் மகளான கிறிஸ்டின் விளையாட்டுதனமானவள். ஒரு நாள் தனது தங்கை உல்விட்டோடு விளையாடிக் கொண்டிருக்கும் போது அடுக்கி வைத்திருந்த மரக்கட்டைகள் …

காலத்தால் அழியாத உண்மை Read More »

பியர் கிரிபாரியின் கதைகள்

ஒரு உருளைக்கிழங்கின் காதல் கதை என்றொரு சிறார்கதையைப் பிரெஞ்சு எழுத்தாளர் பியர் கிரிபாரி (Pierre Gripari) எழுதியிருக்கிறார். அக்கதையில் ஒரு சிறுவன் தனது வீட்டின் சமையலறையிலிருந்து ஒரு உருளைக்கிழங்கைத் திருடி, அதன் முகத்தைக் கத்தியால் செதுக்குகிறான். இதனால் உருளைக்கிழங்கிற்குக் கேட்கவும் பேசவும் பார்க்கவும் திறன் ஏற்படுகிறது. பேசத் தெரிந்த அந்த உருளைக்கிழங்கு தான் வெறும் உருளைக்கிழங்காக நடத்தப்படுவதை விரும்பவில்லை. தனக்கெனத் தனியே வாழ்க்கை இருப்பதாக நம்புகிறது. சிறுவனின் வீட்டைவிட்டு வெளியேறி உடைந்து கிடந்த கிதார் ஒன்றை வழியில் …

பியர் கிரிபாரியின் கதைகள் Read More »

அனுபவங்களும் அறிவாற்றலும்.

சச்சிதானந்தன் சுகிர்தராஜா இங்கிலாந்தின் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இவரது கட்டுரைகளைக் காலச்சுவடு மற்றும் காலம் இதழ்களில் படித்திருக்கிறேன். அந்தக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் அப்படியே நியூயார்க்கரிலோ அல்லது தி கார்டியன் இதழிலோ வெளியிட்டிருப்பார்கள். அபாரமான எழுத்து. குறிப்பாக அவரது புலமை மற்றும் எழுத்து நடை வியப்பூட்டக்கூடியது. மெல்லிய கேலியோடு ஒன்றைச் சொல்லும் விதத்தில் கொஞ்சம் அசோகமித்ரனின் சாயல் இருக்கிறது. அவரை எனக்கு மிகவும் பிடித்துப் போனதற்கு முக்கியக் காரணம் அவரும் ஒரு புத்தக விரும்பி. இலக்கியம், …

அனுபவங்களும் அறிவாற்றலும். Read More »

சால் பெல்லோ கேட்ட கதை

யூ.ஆர். அனந்தமூர்த்தியின் சுயசரிதையான Suragiல் அனந்தமூர்த்தித் தான் பழகிய எழுத்தாளர்கள் மற்றும் பல்வேறு இலக்கியச் சந்திப்புகள் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். அதில் அமெரிக்காவில் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான சால் பெல்லோவை கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான ஏ.கே.ராமானுஜன் வீட்டில் சந்தித்த நிகழ்வை எழுதியிருக்கிறார். அந்தச் சந்திப்பின் போது சால் பெல்லோ அணிந்திருந்த அழகான சட்டையைப் பாராட்டிய ராமானுஜத்தின் மனைவி மோலி இது உங்கள் பணக்கார அண்ணன் பரிசாக அளித்ததா என்று கேட்கிறார். தனது கோடீஸ்வர அண்ணன் ஒருமுறை அணிந்துவிட்டு …

சால் பெல்லோ கேட்ட கதை Read More »

நீளும் கரங்கள்

சமீபத்தில் நான் படித்த சிறந்த புத்தகம் சஞ்சயன் செல்வமாணிக்கம் எழுதிய ஒட்டகச்சிவிங்கியின் மொழி. காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இலங்கையின் ஏறாவூரைச் சேர்ந்த சஞ்சயன் நோர்வேயில் வசிக்கிறார். கணினித்துறையில் பணியாற்றுகிறார், இதிலுள்ள கட்டுரைகள் அவரது சொந்த அனுபவத்திலிருந்து எழுதப்பட்டிருக்கின்றன. தான் நேசித்த மனிதர்களை. அவர்களின் தனித்துவத்தை, நட்பை, உறவை சிறப்பாக எழுதியிருக்கிறார். ஒவ்வொரு கட்டுரையும் ஒரு முழுநாவலாக எழுத வேண்டிய அளவு விஷயங்களைக் கொண்டிருக்கின்றது. ஆனால் அதை நான்கு அல்லது ஐந்து பக்க அளவிற்குள் கச்சிதமான வடிவில் சிறப்பாக …

நீளும் கரங்கள் Read More »