கதைருசி
நல்ல சிறுகதைகளுக்குள் கிளையில் அமர்ந்திருந்த பறவை சட்டென பறந்து எழுவது போன்ற பறத்தலை காணமுடியும், அதுவரை வாசகன் தொடர்ந்து வந்த இயல்பு மாறி கதை தன் சிறகுகளை விரித்து மேலே செல்லும் உன்னதத் தருணமது, அந்தத் தருணமே கதையின் முக்கியப் படிமமாக ஆகிவிடுகிறது, அசோகமித்ரனின் காந்தி சிறுகதையில் அது போன்ற ஒரு தருணம் வருகிறது, அத்தருணம் கதையின் அன்றாடத்தன்மையில் இருந்து மேலெழும்பி ஜிவ்வெனப் பறக்க ஆரம்பிக்கிறது, வாசகன் அதன் வழியே வாழ்க்கை குறித்த ஒரு தரிசனத்தை அடைகிறான், …