இலக்கியம்

கதையின் நாவு

ஒரு ஊரிலே ஒரு நரி, அத்தோடு கதை சரி . என ஒரு கதையிருக்கிறது. நான் அறிந்தவரை உலகிலேயே மிகச் சிறிய கதைகளில் இதுவே மிகத்தொன்மையானதாக இருக்ககூடும். இந்த ஒற்றைவரி தரும் கதையின் பன்முகதன்மையே இன்று நவீன கதையின் முக்கிய அடையாளமாகவும் அதே நேரம் தனித்துவமானதொரு கதாமுறையாகவும் உள்ளது.. இக்கதை கதையைக் கேட்பவன் மனதில் தானே உருவாக்கி கொள்ளவேண்டிய கதையாக உள்ளது. நரி கதைகளின் உலகில் ஆதிகுடி. இந்தியர்களும் கிரேக்கர்களும் அரேபியர்களும் கீழைத்தேய நாடுகளின் பயணிகளும் நரியைப் …

கதையின் நாவு Read More »

மகாகவி பாரதியின் கடிதங்கள்

கடிதம் -1 –  1901ம் ஆண்டு தன் மனைவி செல்லம்மாளுவிற்கு எழுதியது. (கடிதம் எழுதும் போது பாரதிக்கு வயது பத்தொன்பது. பாரதி பயங்கரவாத இயக்களுடன் சேர்ந்துவிட்டான் என்று உறவினர் எழுதிய கடிதம் கண்டு பயந்து போன செல்லம்மாள் எழுதிய கடிதத்திற்கான பதிலிது.)                                                         ஒம்                                                                                                                ஸ்ரீகாசி                                                                                                                ஹனுமந்த கட்டம் எனதருமைக் காதலி செல்லம்மாளுக்கு ஆசிர்வாதம். உன் அன்பான கடிதம் கிடைத்தது. நீ என் காரியங்களில் இத்தனை பயப்படும்படியாக நான் ஒன்றும் செய்யவில்லை. விசுவநாதன் அனாவசியமாக உனக்குப் பயத்தை விளைவித்திருக்கிறான். …

மகாகவி பாரதியின் கடிதங்கள் Read More »

எரியும் பனிக்காடு

சமீபத்தில் நான் வாசித்த தமிழ்நாவல்களில் முக்கியமானது எரியும்பனிக்காடு. பி.எச்.டேனியலால் எழுதப்பட்ட இந்த நாவல் ரெட் டீ என்ற பெயரில் ஆங்கிலத்தில் முப்பத்தியெட்டு வருடங்களுக்கு முன்பாக வெளிவந்தது. இந்த நாவல் இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் தமிழ்நாட்டின் வால்பாறையில் தேயிலை தோட்டம் உருவானதையும் அங்கு வேலைக்குச் சென்ற கூலிகளின் அவலவாழ்வையும் விவரிக்கிறது. தமிழக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வை நுட்பமாக விவரிக்கும் ஒரே நாவல் இது தான் என்பேன். இந்த நாவலைத் தமிழாக்கம் செய்தவர் இரா. முருகவேள். 1940 ம் ஆண்டுகளில் …

எரியும் பனிக்காடு Read More »

பேச்சின் வாலைப் பிடித்தபடி..

எங்காவது போய் பேசிக் கொண்டிருக்கலாமா என்ற கேள்வி பலவருடமாக என்னை இலக்கற்று ஏதேதோ இடங்களுக்கு இழுத்து சென்றிருக்கிறது. நண்பர்கள், வாசகர்கள், சக எழுத்தாளர்கள், தோழர்கள், பேராசிரியர்கள், எளிய மனிதர்கள் என்று பலருடனும் பேசி விவாதித்து சண்டையிட்டு கழித்த பகலிரவுகள் என்னளவில் மிக முக்கியமானவை. இன்று அந்த இடங்களைக் கடந்து செல்கையில் இங்கே நின்று கொண்டு தானா அத்தனை மணி நேரம் பேசியிருக்கிறோம் என்று வியப்பாக இருக்கிறது. இடம் சூழல் பசி மறந்து பேசிய பொழுதுகளும் மனிதர்களும் சிதறிப்போய்விட்டார்கள். …

பேச்சின் வாலைப் பிடித்தபடி.. Read More »

குற்றாலத்து சிங்கன் சிங்கி.

              குற்றாலக்குறவஞ்சியை வாசிப்பது எனக்கு பிடித்தமான ஒன்று. திரிகூட ராஜப்ப கவிராயரால் எழுதப்பட்டது. அதிலும் சாரல் அடிக்கும் நாட்களில் குற்றாலத்தில் உள்ள பூங்காவில் அமர்ந்தபடியே  குற்றாலக்குறவஞ்சி வாசித்திருக்கிறேன். கண்ணை மூடிக் கொண்டுவிட்டால் காலம் கரைந்து பின்னோடிவிட வசந்தவல்லி பூப்பந்தாடும் காட்சி விரியத்துவங்கிவிடும். குற்றாலத்தின் ஆதிசித்திரம் அந்தக் கவிதைகளில் பதிவாகியுள்ளது. கானகக்குறத்தி வருகிறாள். அவளது எழிலும் குரலும் அதில் வெளிப்படும் காட்டுவாழ்வின் நுட்பங்களும், மழை பெய்யும் மேகமும், அடர்ந்த விருட்சங்களும், …

குற்றாலத்து சிங்கன் சிங்கி. Read More »

சிப்பியின் வயிற்றில் முத்து

          வங்காளத்தில்  1980 ஆண்டு வெளியான jhinuker pete mukto  என்ற நாவல் சமகால இந்திய நாவல்களில் மிகவும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. இதை எழுதியவர் போதி சத்வ மைத்ரேய. இந்த நாவல் தமிழில் சிப்பியின் வயிற்றில் முத்து என்ற பெயரில் எஸ். கிருஷ்ணமூர்த்தியால் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த வங்காள நாவலின் சிறப்பம்சம் இது முழுமையாக தமிழக மக்களின் வாழ்வை விவரிக்கிறது. குறிப்பாக தூத்துக்குடியில் உள்ள பெர்னாந்தோ பிரிவு மீனவர்களின் வாழ்க்கைபாடுகளையும் அவர்களுக்குள் …

சிப்பியின் வயிற்றில் முத்து Read More »

டால்ஸ்டாயோடு நடந்தேன் 2

எல்லா அப்பாக்களும் பையன்களை விடவும் பெண்கள் மீதே அதிக அன்பும் நெருக்கமும் கொண்டிருக்கிறார்கள். அதுவும் எல்லா பெண்களுக்கும் கிடைப்பதில்லை. ஏதோவொரு மகள் அப்பாவின் மிகுந்த அன்பிற்கும்  பரிவிற்கும் உள்ளாகிறாள். அப்படி டால்ஸ்டாயின் அன்பிற்கு உரியவளாக இருந்தவள் மாஷா. தன்னுடைய குழந்தைகளை முத்தமிடுவதை கூட ஒரு சடங்கு போல செய்யக்கூடியவர் டால்ஸ்டாய். தாயின் வளர்ப்பில் மட்டுமே உருவானவர்கள் அவரது பிள்ளைகள். அந்த நிலையில் மாஷா ஒருத்தி மட்டும் அப்பா எழுதிக்கொண்டிருக்கும் போது அருகில் நின்று பேசுவது அவரை கொஞ்சுவது …

டால்ஸ்டாயோடு நடந்தேன் 2 Read More »

டால்ஸ்டாயோடு நடந்தேன் 1

        கடந்த ஒரு மூன்று வார காலமாகவே புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளரான லியோ டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துக் கொண்டிருந்தேன். அவரது மனைவியின் நாட்குறிப்புகள். மகன் மகள்களின் நினைவுப்பதிவுகள் மற்றும் டால்ஸ்டாயின் இறுதி நாட்கள் பற்றிய அவரது உதவியாளரின் குறிப்புகள் , டால்ஸ்டாயின் கடிதங்கள் என்று நாலைந்து புத்தகங்கள் அவரது வாழ்வை விவரிக்கின்றன. 1) Leo Tolstoy`s Diaries & Letters 2) The Diaries of Sophia Tolstoy 3) …

டால்ஸ்டாயோடு நடந்தேன் 1 Read More »

கவிதையும் கோவிலும்

              புகழ் பெற்ற கவிஞர்களுக்கு சிலை வைக்கும் வழக்கம் உலகமெங்கும் உள்ளது. பல நாடுகளில் கவிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில் அவர்களது வாழ்விடங்கள் நினைவகமாக்கப்பட்டு மாதந்தோறும் சிறப்பு கூட்டங்கள், கவிதை வாசித்தல் என்று அக்கறையோடு செய்யப்படுகின்றன. இந்தியாவில் காந்திசமாதி போன்று ஒன்றிரண்டு நினைவிடங்களை தவிர மற்றவை முறையான பராமரிப்பின்றி கவனிப்பார் அற்றே கிடக்கின்றன. இதில் எழுத்தாளர்கள் கவிஞர்கள் நினைவிடங்களின் கதி எப்படியிருக்கும் என்பது உலகமறிந்த செய்தி. தமிழகத்தில் வள்ளுவர், ஔவை, …

கவிதையும் கோவிலும் Read More »

டோனி மாரிசன்

நியூயார்க்கர் இதழ் சென்ற ஆண்டு அமெரிக்காவில்கடந்தஇருபத்தைந்து வருடங்களில் வெளியான சிறந்த நாவல் எது என்று  ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி அதில் நோபல்பரிசு பெற்ற எழுத்தாளரான டோனி மாரிசனின்  Beloved நாவலைத் தேர்வு செய்தது. அப்போது இதை மறுபடியும் படிக்க வேண்டும்என்று நினைத்திருந்தேன். சில நாட்களுக்கு முன்பாக அதைத் திரும்ப வாசிக்க நேர்ந்தது. 1987ல் வெளியான இந்த நாவலைப் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை படித்திருக்கிறேன். அப்போது எனக்கு நாவலின் மையமாகப் பட்டது முக்கியப் பெண்கதாபாத்திரம் மற்றும் …

டோனி மாரிசன் Read More »