திரை பார்த்தல்
ஒரு நாளைக்கு சராசரியாக எட்டு முதல் பத்து மணி நேரம் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். உலகில் வேறு எந்த பொருளையும் இவ்வளவு நேரம் நான் பார்த்து கொண்டிருந்ததேயில்லை. திரையை பார்த்து கொண்டும் படித்தும் கொண்டு இருப்பது அலுப்பதேயில்லை. என்ன வசீகரமது? ஒரு செல்போன் விளம்பரம் ஒன்றில் காதில் போனை வைத்தபடியே நாளெல்லாம் பேசிப்பேசி தலை ஒருச்சாய்ந்து போன மனிதனை காட்டுவார்கள். அவன் எங்கே போனாலும் தலையை சாய்த்துக் கொண்டே பேசுவான். கணிணி முன் நாள் எல்லாம் இருப்பவர்கள் …