அகத்துணையான எழுத்து
ந. பிரியா சபாபதி நம்மை நமக்கும் நாம் அறியாத பிறரின் வாழ்க்கையையும் நமக்குக் காட்டும் முகம் பார்க்கும் கண்ணாடி போன்ற புத்தகம் இந்தத் ‘துணையெழுத்து’ நூல். “மறப்போம் மன்னிப்போம்” இந்த வார்த்தைகளுக்கு உரியவர்கள் குழந்தைகள்தாம். குழந்தைகள் உலகம் மாய உலகமும் அல்ல, மந்திரம் உலகமும் அல்ல. நிதர்சமான உண்மையை உணர்ந்த உலகம் ஆகும். குழந்தைகளை ‘ஞானியர்’ என்று சொன்னால் மிகையாது. அவர்கள் பொம்மையைத் தன் உலகமாகப் பார்க்கும் பொழுது பெரியவர்களின் பார்வைக் கோணமும் குழந்தைகளின் பார்வைக் கோணமும் …