கல்வியின் பாதை.
Class Dismissed – என்ற டாகுமெண்டரி திரைப்படத்தைப் பார்த்தேன். அமெரிக்க பொதுக்கல்வி முறையின் குறைபாடுகளைப் பற்றிப் பேசும் இப்படம் ஹோம் ஸ்கூலிங் போன்ற மாற்றுக்கல்வி முறைகளின் தேவை குறித்து விவாதிக்கிறது. அமெரிக்கா முழுவதிலும், பெற்றோர்கள் பொதுக் கல்வி நிலை குறித்து அதிருப்தி அடைந்துள்ளார்கள். .அப்படி அதிருப்தி அடைந்த லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு குடும்பம், தங்கள் இரு குழந்தைகளையும் புகழ்பெற்ற பள்ளி ஒன்றிலிருந்து படிப்பை நிறுத்தி ஹோம் ஸ்கூலிங் முறைப்படி வீட்டிலே கல்வி கற்க வைக்கிறார்கள். அவர்களின் …