பத்து இணையதளங்கள்
கல்லில் வடித்த கவிதைகள். : சிற்பங்கள், ஒவியங்கள் மற்றும் பராம்பரியமிக்க கோவில்கள், என்று தமிழக நுண்கலையின் சிறப்புகளை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தும் இணையதளமிது. தமிழில் நான் தொடர்ந்து வாசிக்கும் இணையதளங்களில் இதுவும் ஒன்று. ஆங்கிலத்திலும் இந்த இணையதளம் வாசிக்க கிடைக்கிறது. புகைப்படங்கள். விளக்கங்கள், ஆய்வுகுறிப்புகள் என்று நேர்த்தியாகவும் நுட்பமாகவும் சிற்பக்கலை குறித்த கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. இணையதளத்தின் வடிவமைப்பே அழகாக உள்ளது. சரித்திரம், தொல்லியல் குறித்த பல்வேறு இணைய தள இணைப்புகளும் இதில் காணப்படுகின்றன. https://www.poetryinstone.in …