பப்புவின் காலணி
புதிய சிறுகதை. (அச்சில் வெளிவராதது.) “பப்பு உனக்காக இன்று காலையில் புது ஷு ஒன்று வாங்கியிருக்கிறேன். உனக்குப் பிடித்திருக்கிறதா“ என வாட்ஸ்அப்பில் புகைப்படத்துடன் என் மகளுக்குத் தகவல் அனுப்பி வைத்தேன். அவள் லண்டனில் வசிக்கிறாள். மருத்துவராக இருக்கிறாள். மறுநிமிசம் அவளிடமிருந்து பதில் தகவல் வந்தது “அப்பா.. என் வயது 37. நீங்கள் என்னை இன்னமும் சிறுமியாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் வாங்கிய ஷு பத்து வயது சிறுமி அணியக் கூடியது. இது இந்த ஆண்டில் நீங்கள் வாங்கிய …