சிறுகதை

பஷீரின் திருடன்.

2021 ஆகஸ்ட் காலச்சுவடில் வெளியான எனது குறுங்கதை எத்தனையோ திருடர்களையும் போக்கிரிகளையும் பிச்சைக்காரர்களையும் சீட்டாடிகளையும் தனது கதைகளில் எழுதி மக்கள் மனதில் நிலைபெறச் செய்திருக்கிறாரே பஷீர் அவர் ஏன் தன்னைப் பற்றி ஒரு கதை கூட எழுதவில்லை என்ற ஏக்கம் கள்ளன் யூசுப்பிற்கு நீண்டகாலமாக இருந்தது, அவன் தான் வைக்கம் முகமது பஷீரின் பர்ஸை பிக்பாக்கெட் அடித்தவன். அதில் சில்லறைக் காசுகளைத் தவிரப் பணம் ஏதுமில்லை என்று தெரிந்து அவரிடமே திரும்பக் கொண்டு போய்க் கொடுத்தவன். அவனது …

பஷீரின் திருடன். Read More »

கோடைகாலப் பறவை

புதிய சிறுகதை ரங்கநாத் கையில் செம்மஞ்சள் நிறத்தில் கறுப்பு புள்ளிகளிட்ட சிறகொன்றை வைத்திருந்தான். நீளமான அச்சிறகு வசீகரமாகயிருந்தது “அது என்ன பறவையின் சிறகு“ என்று கேட்டாள் லூசி. “பெயர் தெரியவில்லை. ஆனால் இப்படியான சிறகை இப்போது தான் முதன்முறையாகப் பார்க்கிறேன்“ என்றான் ரங்கநாத் கோத்தகிரியிலுள்ள உறைவிடப் பள்ளி ஒன்றின் முதல்வராகப் பணியாற்றினாள் லூசி. தங்கபிரேம் போட்ட மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தாள். கூர்மையான நாசி, ஐந்தரை அடிக்கும் மேலான உயரம். ஒடிசலான உடல்வாகு. அரக்கு வண்ண காட்டன் புடவை …

கோடைகாலப் பறவை Read More »

இரண்டு ஜப்பானியர்கள்

புதிய சிறுகதை அந்த இரண்டு ஜப்பானியர்களும் ஏழாயிரம் கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து வந்திருந்தார்கள். கியாத்தோவிலிருந்து இந்தியாவின் தென்கோடியிலிருந்த கொடைக்கானல் மலைக்கு வந்து சேர்ந்த தூரமது. உடல்வாகை வைத்து ஜப்பானியர்களின் வயதைக் கண்டறிய முடியாது. முகத்திலும் பெரிய மாற்றமிருக்காது. முழுவதுமாகத் தலைநரைத்த ஜப்பானியர் ஒருவரைக் கூட நந்தகுமார் கண்டதில்லை. கொடைக்கானலுக்கு வரும் வெள்ளைக்காரர்களில் ஒரு சிலரே வசதியானவர்கள். மற்றவர்கள் அந்த நாடுகளில் நடுத்தர வருமானமுள்ள தொழிலாளர்களாகவோ, அலுவலகப் பணியாளர்களாகவே இருப்பவர்கள். அபூர்வமாக ஒன்றிரண்டு இசைக்கலைஞர்கள், புகைப்படக்கலைஞர்கள் வருவதுண்டு. இதுவரை …

இரண்டு ஜப்பானியர்கள் Read More »

கடைசிக் குதிரைவண்டி

புதிய சிறுகதை கண்ணாயிரம் வீட்டின் பெரிய இரும்புக் கேட்டை ரகசியமாகத் தள்ளி அந்த இடைவெளியின் வழியே உள்ளே எட்டிப்பார்த்தார் சேர்மதுரை. குதிரை கண்ணில் படவில்லை. வாசலை ஒட்டி ஒரு இன்னோவா கார் நிற்பது மட்டும் தான் கண்ணில் தெரிந்தது. எக்கிக் கொண்டு பார்த்தபோது நாலைந்து பூச்செடிகளும் பைக் ஒன்றும் கண்ணில் பட்டது குதிரையை எங்கே கட்டிப்போட்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. நேற்று மாலை அவரது கடனுக்காகக் குதிரையைக் கண்ணாயிரத்தின் ஆட்கள் பிடித்துக் கொண்டு போய்விட்டார்கள். அந்த நேரம் சேர்மதுரை …

கடைசிக் குதிரைவண்டி Read More »

தேவகியின் தேர்

புதிய சிறுகதை “நம்ம கோவில் தேரைப் பார்க்க வந்திருக்கிறார். அவரைத் தேரடி முக்கு வரைக்கும் அழைச்சிட்டு போயிட்டு வா“ என்று ஹரியிடம் அப்பா சொன்ன போது அவன் சாப்பிடுவதற்காக உட்கார்ந்திருந்தான். அம்மா தோசைக்கல்லை அப்போது தான் அடுப்பில் போட்டிருந்தாள். அம்மா மெதுவாகத் தான் தோசை சுடுவாள். அதுவும் அப்பாவிற்குச் சுடும்போது இடையில் வேறு யாரும் சாப்பிட வந்துவிடக்கூடாது. அப்பா சாப்பிட்டுமுடித்துப் போன பிறகு தான் மற்றவர்களுக்குச் சாப்பாடு அப்பா ஆதிகேசவப்பெருமாள் கோவிலின் நிர்வாகத்தைப் பார்க்கிறவர் என்பதால் அதிகாலையிலே …

தேவகியின் தேர் Read More »

வாழ்வின் தேவை

சிறுகதை குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காகத் தான் ஸ்வேதா அம்மாவை வரவழைத்திருந்தாள். இரண்டாவது பிரசவத்தின் போது சிக்கலாகிவிட்டது. நிறையக் குருதிப்போக்கு. அறுவைசிகிச்சை. அவளை இரண்டுமாதகாலம் படுக்கையில் கிடத்திவிட்டது. இதற்கு மேல் லீவு போட முடியாது என்ற சூழலில் அலுவலகம் போய்வரத்துவங்கினாள். அப்பா இருக்கும்வரை அம்மா தனியே பயணம் செய்ததேயில்லை. ஆனால் இப்போதெல்லாம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பஸ் ஏற்றிவிட்டால் தானே பெங்களூர் வந்துவிடுகிறாள். கன்னடம் தெரியாத போதும் அவளாக ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்துவிடுகிறாள். இந்த முறை அப்படித்தான் வந்து …

வாழ்வின் தேவை Read More »

கைதட்டுகள் போதும்

சிறுகதை அந்த ஊரில் ரங்கசாமியின் வீட்டிற்கு மட்டும் கதவில்லை. தனக்குக் கதவு தேவையில்லை என்று பிடுங்கி எறிந்துவிட்டார். கதவற்ற அவரது வீட்டிற்கு யார் வரப்போகிறார்கள். காற்றையும் சூரிய வெளிச்சத்தையும் அபூர்வமாக வரும் மழையையும் தவிர வேறு மனிதர்கள் அந்த வீட்டிற்கு வருவதேயில்லை. ரங்கசாமி சர்க்கஸில் வேலை செய்ததன் அடையாளமாக அவரிடம் மிஞ்சமிருந்தது ஒற்றைச் சக்கரம் கொண்ட சைக்கிள் மட்டுமே. அந்தச் சைக்கிளில் தான் இப்போதும் அவர் வெளியே போய் வருகிறார். விளாம்பட்டி என்ற அந்தச் சிறிய கிராமத்தில் …

கைதட்டுகள் போதும் Read More »

தலைகீழ் அருவி

புதிய சிறுகதை “குற்றாலத்துக்குப் போவமா“ என்று சங்கரன் கேட்டபோது அவர்கள் டீக்கடையில் அமர்ந்திருந்தார்கள். சங்கரனை மறுப்பது போல மதன் தலையை அசைத்தபடியே சொன்னான் “அருவியில் இப்போ ஒரு சொட்டுத் தண்ணி கூட இருக்காது. “ “அது தான் நமக்கு வேணும்“ “மொட்டைப்பாறையைப் பாக்க அவ்வளவு தூரம் போகணுமா“ “சீசன்ல குளிக்க நிறையத் தடவை போயிருக்கோம்லே . இப்போ ஒரு தடவை மொட்டைப் பாறையைப் பாத்துட்டு வருவோம்“ “அதுல என்னடா இருக்கு“ என்று கேட்டான் கேசவன் “உனக்குச் சொன்னா …

தலைகீழ் அருவி Read More »

இரண்டும் கப்பல் தான்.

புதிய சிறுகதை சூயஸ் கால்வாயைத் தடுத்து நின்றிருந்த அந்தக் கப்பல் பிடிபட்ட திமிங்கலம் ஒன்றைப் போலிருந்தது தொலைக்காட்சியின் முன்னால் அமர்ந்தபடியே திரையில் தெரியும் அந்தக் கப்பலைப் பார்த்துக் கொண்டிருந்தார் கோபால் ரத்னம். மணி மூன்றைக் கடந்திருந்தது. பின்னிரவில் பாதி உறக்கத்திலிருந்து எழுந்து வந்து எதற்காக இப்படிச் சூயஸ் கால்வாயில் மாட்டிக் கொண்டிருந்த கப்பலைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என அவருக்கே புரியவில்லை. ஆனால் அந்தக் கப்பல் அவரைச் சில நாட்களாகத் தொந்தரவு செய்து கொண்டேயிருந்தது. அதை எப்போது மீட்பார்கள். …

இரண்டும் கப்பல் தான். Read More »

அதிர்ஷ்டத்தின் சுண்டுவிரல்

புதிய சிறுகதை டாக்டர் மோகன் தங்கையா தனது ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு இரண்டாம் முறையாகப் பிள்ளையார் கோவில் தெரு வரை போய் வந்தார். ஆறு மாதங்களுக்கு முன்பு புதிதாகத் துவங்கியிருந்த அன்பரசன் கிளினிக் வெளியே முப்பது நாற்பது பேருக்கும் மேலாகக் காத்திருந்தார்கள். மணி ஐந்தாகியிருந்த போதும் இன்னமும் டாக்டர் வரவில்லை. ஒருவேளை ராயல் ஹாஸ்பிடலில் இருப்பாரோ என்னவோ. பெட்டிக்கடையினை ஒட்டித் தனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு மருத்துவமனை வெளியே காத்திருப்பவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்படி என்ன அன்பரசனிடம் யாரும் …

அதிர்ஷ்டத்தின் சுண்டுவிரல் Read More »