தனிமையெனும் தீவு
ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படங்களுக்கும் ஜப்பானிய அனிமேஷன் திரைப்படங்களுக்கும் இடையில் அடிப்படையிலே வேறுபாடிருக்கிறது. வெறும்பொழுதுவிஷயங்களைத் தாண்டி, காட்டை அழித்து இயற்கை வளங்களை நாசப்படுத்துவது குறித்தும். போருக்கு எதிராகவும், வாழ்வின் அடிப்படை மதிப்பீடுகள் குறித்தும், தொழில்மயமாதல், நகர்மயமாதலின் விளைவுகள் பற்றியும், சிறார்களின் வியப்பபூட்டும் கனவுகள். கற்பனைகள் பற்றியும் ஜப்பானிய அனிமேஷன் படங்கள் பேசுகின்றன. அதீத வன்முறைக்காட்சிகள். இன மதத் துவேசம் எதையும் ஜப்பானிய அனிமேஷனில் காணமுடியாது. மூத்தோர்களின் வழிகாட்டுதலும் ஞானமும் அவசியமானது. இயற்கையோடு இணைந்து வாழுதல் முக்கியம். உறுதியான நம்பிக்கையும் …