குறுங்கதை

நடைக்கூலி

புதிய குறுங்கதை இது நடந்தது 1814ல். சுமேர்பூரில் முகாமிட்டிருந்த கிழக்கிந்திய கம்பெனி அதிகாரி ஜான் சாமுவேலிடம் கடிதம் பெறுவதற்காக அந்த ஆள் வெளியே காத்திருந்தார். ஆறடி அடிக்கும் மேலான உயரம். தலையில் பெரிய தலைப்பாகை. அடர்ந்து நரைத்த மீசை. தாடி. பழுப்பு நிறமான கண்கள். கூர்மையான மூக்கு. தோளில் போர்வை போன்றதொரு ஒரு துண்டு. பலானா கிராமத் தலைவருக்கு எழுதப்பட்ட அந்தக் கடிதத்தை ஒப்படைக்கும் போது சாமுவேல் அவரது பெயரைக் கேட்டார் “சாப்பன்“ என்று சொன்னார். ராஜஸ்தானிய …

நடைக்கூலி Read More »

பக்கத்து இருக்கை

புதிய குறுங்கதை பத்தொன்பது ஆண்டுகளாக அவன் டயரி எழுதி வருகிறான். அவற்றை ஒரு மரப்பெட்டியில் பாதுகாத்தும் வருகிறான். அவனது டயரியில் ஒரு நாளில் என்ன நடந்தது என்பதைப் பற்றி எழுதவில்லை. மாறாக எங்கே சென்றாலும் அவனது பக்கத்து இருக்கையில் யார் அமர்கிறார்கள் என்பதைப் பற்றி மட்டுமே எழுதி வந்தான். பக்கத்து இருக்கையில் யார் அமர்ந்திருக்கிறார்கள் என்பது பலருக்கும் பொருட்டேயில்லை. ஆனால் அவனுக்கு அது முக்கியமானது. தன்னருகில் அமர்ந்திருப்பவர் சில நிமிஷங்களோ, சில மணி நேரமோ தன்னுடன் அவரது …

பக்கத்து இருக்கை Read More »

இருமொழிப் புத்தகம்

புதிய குறுங்கதை அவன் கையிலிருந்தது இருமொழிப்புத்தகம். அவனுக்கு அந்த இரண்டு மொழிகளும் தெரியாது. ஆனாலும் அப்புத்தகத்தை அவன் ஆசையாக வைத்திருக்கிறான். அடிக்கடி புரட்டிப் பார்க்கிறான். அது ஒரு கவிதைத் தொகுதி என்பதை வடிவத்தை வைத்துத் தெரிந்து கொண்டான். ஒரு பக்கம் கவிஞனின் மூலமொழியிலும் மறுபக்கம் மொழியாக்கம் செய்யப்பட்ட மொழியிலும் அச்சிடப்பட்டிருந்தது. அவனைப் போன்றவர்களுக்கு இருபுறமும் தெரிவது  சொல்வடிவு கொண்ட கோடுகளே. கிழே கிடந்த கூழாங்கல்லை கையில் எடுத்து உருட்டும் போது கிடைக்கும் சந்தோஷம் போல மொழி அறியாத …

இருமொழிப் புத்தகம் Read More »

பாதிப்படம்

புதிய குறுங்கதை வீட்டில் அப்பாவும் அம்மாவும் சண்டை போட்டுக் கொள்ளும் நாளில் அப்பா கட்டாயம் சினிமாவிற்குப் போவார். அது சில நேரம் இரவு செகண்ட் ஷோவாகக் கூட இருக்கக் கூடும். அப்படிச் சினிமாவிற்குப் போகும் போதெல்லாம் அவனையும் அழைத்துக் கொண்டு போவார். ஆகவே அப்பா அம்மாவின் சண்டை சிறுவனான அவனை மகிழ்ச்சிப்படுத்தவே செய்தது. “என்னை இப்படி விட்டுட்டு நீங்க சினிமாவுக்குப் போனா நான் செத்துப் போயிருவேன் பாத்துக்கோங்க“ என்று அம்மா கத்துவாள். அப்பா அதைக் காது கொடுத்துக் …

பாதிப்படம் Read More »

நிமிடங்களின் மயில்தோகை

புதிய குறுங்கதை அவளுக்கு இருபத்தைந்து வயதிருக்கும். கரும்பச்சை நிற சுடிதார் அணிந்திருந்தாள். சிவப்பு நிற ஸ்கூட்டியில் வந்திருந்தாள். அவள் ரகுவிடம் மணி கேட்டாள். மூன்று நாற்பது என்றான் அவள் மெல்லிய குரலில் மூன்று நாற்பதா என்று திரும்பக் கேட்டாள். மறுபடியும் கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு ஆமாம் என்றான் அவள் எதையோ நினைத்து பெருமூச்சிட்டுக் கொண்டாள். அவள் மழலையர் பள்ளியில் படிக்கும் தனது மகளை அழைத்துப் போவதற்காக வந்திருந்தாள். ரகுவும் தனது மகளுக்காகவே வந்திருந்தான். பள்ளிவிடுவதற்கு இன்னும் இருபது நிமிடங்கள் …

நிமிடங்களின் மயில்தோகை Read More »

பெயரின் அருகில்

புதிய குறுங்கதை அவரது கையில் குரூப் போட்டோ இருந்தது. சி.எஸ். ஸ்கூலில் ஆறாம் வகுப்பில் எடுத்தது. அதிலிருந்தவர்களின் பெயர்களை நினைவிற்குக் கொண்டு வர முயன்றார். ஐந்தாறு பெயர்களைத் தவிர வேறு நினைவில் இல்லை. எழுபத்தியெட்டு வயதிலிருந்து கொண்டு ஆறாம் வகுப்பில் படித்தவர்களின் பெயர்களை நினைவு கொள்வது எளிதான என்ன. பெயர் மறைந்து போன வகுப்புத்தோழர்கள் உதிர்ந்த சிறகுகளைப் போலிருந்தார்கள். சிறகை வைத்து எந்தப் பறவை உதிர்த்தது எனக் கண்டுபிடிக்க முடியாதே. புகைப்படத்தில் உள்ள யார் யாரை ஞாபகம் …

பெயரின் அருகில் Read More »

கற்பனைத் தீவுகள்

புதிய குறுங்கதை சட்டைப்பையில் வைத்துக் கொள்ளக்கூடிய பாக்கெட் நோட் ஒன்றை அவன் வைத்திருந்தான். அந்த நோட்டில் அவன் கேள்விப்படுகிற தீவுகளின் பெயர்களை எழுதி வைத்துக் கொள்வான். அவனைப் பொறுத்தவரைத் தீவு என்பது அவனது ஆறாவது விரலைப் போன்றது. வரைபடத்தில் காணும் போது எல்லாத் தீவுகளும் மேஜையில் சிந்திய மைத்துளி போலவே தோற்றமளிக்கின்றன. அவனுக்குத் தீவின் பெயர்களைச் சேகரிப்பது பிடித்தமான வேலை. அவன் சந்திக்கும் பலரிடமும் அவர்கள் கேள்விப்பட்ட தீவுகளைப் பற்றி விசாரிப்பான். நாளிதழ்களிலோ, புத்தகங்களிலோ, தொலைக்காட்சியிலோ தீவின் …

கற்பனைத் தீவுகள் Read More »

உறங்கும் நாய்கள்

புதிய குறுங்கதை மூன்று நாய்கள் ஒன்று சேர்ந்து ஒரு வட்டத்தை உருவாக்கியிருப்பதைக் கண்டேன். எனது குடியிருப்பின் படிக்கட்டை ஒட்டிய இடம் சாம்பல் நிற நாயுடையது. இப்போது அந்த இடத்தில் மூன்று நாய்கள் வளையம் போல உறங்கிக் கொண்டிருந்தன. காலில் ஒன்றை மடக்கி இன்னொரு காலை பின்னங்கால் மீதிட்டு வாலைத் தளர்த்தி ஒடுங்கிய முகத்துடன் உறங்கும் மூன்று நாய்களுக்கு நடுவே நீல நிற கிழிந்த துணியொன்று கிடந்தது விநோதமாகத் தோன்றியது. என்ன ஆயிற்று இந்த மூன்று நாய்களுக்கும். யாராவது …

உறங்கும் நாய்கள் Read More »

பழைய மனிதர்

புதிய குறுங்கதை பூங்காவில் அந்த நபரைப் பார்த்தேன். ஐம்பது வயதிருக்கும். வெளிர் பச்சை நிற கதர் வேஷ்டி. கட்டம் போட்ட சட்டை அணிந்திருந்தார். அவர் அணிந்திருந்த கண்ணாடியின் இடது பக்கப் பிடி உடைந்திருந்தது. அதை நூலால் கட்டியிருந்தார். வழக்கமாகப் பூங்காவிற்கு வருகிறவராகத் தெரியவில்லை. இன்றைக்குத் தான் முதன்முறையாகப் பார்க்கிறேன். அவரது கையில் ஒரு நியூஸ் பேப்பர் இருந்தது. அந்த செய்தித்தாளை விரித்து ஆர்வமாகப் படித்துக் கொண்டிருந்தார். பேப்பரின் முதற்பக்கத்தில் சத்தியவாணி முத்து மரணம் எனத் தலைப்பு செய்தி …

பழைய மனிதர் Read More »

அவனது மௌனமும் அவளது மௌனமும்

புதிய குறுங்கதை புத்தக வாசிப்பும் அது பற்றிய பேச்சுமே அவர்களுக்குள் காதலை உருவாக்கியது. ஆசை ஆசையாகப் புத்தகங்களைப் பரிசளித்துக் கொண்டார்கள். பின்பு அவர்களுக்குத் திருமணமானது. மணவாழ்க்கையை துவங்கிய புதிதில் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். தாங்கள் வாங்கும் புதிய புத்தகத்தின் முதல் பக்கத்தை அவன் படித்தால் அவள் இரண்டாவது பக்கத்தைச் சப்தமாகப் படிக்க வேண்டும். இப்படி ஒரே புத்தகத்தை ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக் கொண்டார்கள். இருவருக்கும் விருப்பமான நாவல் ஒன்றை வாங்கினார்கள். அதன் ஒற்றைப் படையான பக்கங்களை …

அவனது மௌனமும் அவளது மௌனமும் Read More »