குறுங்கதை 34 சூட்கேஸ்
வெளியூர் செல்லும் நேரங்களில் அவன் தன் மனைவியை ஒரு சூட்கேஸ் போல உருமாற்றி எடுத்துச் சென்றுவிடுவான். சூட்கேஸ் ஒருபோதும் பயண நெருக்கடி பற்றியோ, புதிய இடம் பற்றியோ முணுமுணுப்பதில்லை. அதற்குச் சிறிய மூலை போதும். அவனுக்குத் தேவையான உடைகள். பற்பசை, சேவிங்கிரீம், ரப்பர் செருப்பு வரை எல்லாவற்றையும் பாதுகாப்பாக வைத்துக் கொண்டது சூட்கேஸ். விடுதிகளின் வரவேற்பறையில் அவன் சூட்கேஸ் உடன் நிற்பது தான் பெருமையாகக் கருதப்பட்டது. வெறும் கையோடு வருபவனைப் பயணியாக யாரும் மதிப்பதில்லை. அவன் வெளியே …