குறுங்கதை- 8 கனவின் நடனம்
அந்த நகரில் எல்லோரும் கனவில் நடனமாடினார்கள். விடிந்து எழுந்தவுடன் தாங்கள் கனவில் ஆடிய நடனத்தைப் பற்றி வெட்கத்துடன், பெருமிதத்துடன், கூச்சத்துடன் பகிர்ந்து கொண்டார்கள். ஒரு இளம் பெண் சொன்னாள். நான் “நீர்க்குமிழி வானில் பறப்பது போல நடனமாடினேன்“. ஒரு இளைஞன் சொன்னான் “பாய்ந்தோடும் குதிரையின் வேகம் போலிருந்தது எனது நடனம்“. ஒரு முதியவர் சொன்னார் “நதிக்கரையோர நாணலின் அசைவு போன்றிருந்தது எனது நடனம்“. வீட்டு வேலைக்காரப் பெண் சொன்னாள் “காற்றில் ஈரத்துணிகள் உலர்வது போலிருந்தது எனது ஆட்டம்“. …