குறுங்கதை

குறுங்கதை 15 உடைவாளின் பாடல்

யுத்தம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போர்வீரனுக்குத் தனது உடைவாள் ஏதோ முணுமுணுப்பது போன்ற சப்தம் கேட்டது. சொல்வதற்கு உடைவாளிற்கு என்ன இருக்கப்போகிறது என அவன் கண்டுகொள்ளவில்லை. ஆற்றைக் கடப்பதற்காக அவன் படகிற்குக் காத்திருந்த போது அவனது உடைவாள் பாடத்துவங்கியது. மெல்லிய குரலில் வென்ற நிலத்தை,கொன்ற மனிதர்களைப் பற்றிய பெருமைகளைப் பாட ஆரம்பித்தது . உடைவாள் கூடப் பெருமை பேசுகிறதே என வியந்தபடியே அந்தப்பாடலை ரசித்தான் போர்வீரன். ஆற்றினைக் கடந்து மறுகரைக்குப் போன போது உடைவாள் சப்தமாக …

குறுங்கதை 15 உடைவாளின் பாடல் Read More »

குறுங்கதை 14 புதுக்குரல்

திடீரென ஒரு நாளில் அந்த நகரிலிருந்த சுவர்க்கடிகாரங்கள் யாவும் தன் ஒலியைத் தானே மாற்றிக் கொண்டுவிட்டன. டிங் டிங் என அதன் ஒலிக்கும் ஓசை நீண்டகாலமாகவே ஒரே போலிருந்தது தான் காரணமா, இல்லை ஓசை எழுப்பாத கடிகாரங்கள் வந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இப்படி மாறியதா எனத் தெரியவில்லை. ஆனால் சுவர்க்கடிகாரத்திலிருந்து க்கூ க்கூ என விசித்திரமாகப் பறவையின் ஒலி போலச் சப்தம் வர ஆரம்பித்தது. அரண்மனை அலங்கார கடிகாரம் ஒன்று இப்படிச் சபதமிடுவதாக மக்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள். …

குறுங்கதை 14 புதுக்குரல் Read More »

குறுங்கதை -13 பெருங்கோபம்

கூழாங்கல்லின் அளவிலே இருந்தது அந்தத் தவளை. ஆனால் அதன் கோபம் கருநாகத்தின் சீற்றம் போல வெளிப்பட்டது. தன்னைச் சுற்றி நடக்கும் மோசமான செயல்களைக் கண்டு அத்தவளை பெருங்கோபம் கொண்டிருந்தது. எதுவும் சரியாக நடக்கவில்லை. யாரும் சரியானவர்களில்லை என்று சதா புலம்பிக் கொண்டேயிருந்தது. சுயநலம், அப்பட்டமான சுயநலம் என்று மற்ற விலங்குகளைப் பார்த்துக் குற்றம் சாட்டியது. தவளையின் கோபம் கள்ளப்பார்வையுடன் திரியும் ஓநாய் மீது திரும்பியது “எவரையும் அடித்துக் கொல்வதிலே குறியாக இருக்கிறாய். உன் புத்தி அற்பமானது. நான் …

குறுங்கதை -13 பெருங்கோபம் Read More »

குறுங்கதை -12 இரண்டு பிரார்த்தனைகள்

புதிதாகத் திருமணமாகி கணவன் வீடு வந்த இளம்மனைவி சமையலறைக்குள் நுழைந்தாள். முதல்நாள் சமைக்கப்போகிறோம் என்ற பதைபதைப்பு அவளுக்குள்ளிருந்தது. அடுப்பின் முன்னால் வந்து நின்று இரண்டு பிரார்த்தனைகளைச் செய்தாள். ஒன்று நெருப்பிடம். மற்றொன்று உப்பிடம் நெருப்பிடம் அவள் பிரார்த்தனை செய்தாள். “மிகாமலும் குறையாமலும் துணையிருந்து சமைப்பதில் உதவி செய். உன் கோபத்தை காய்கறிகளிடம் காட்டாதே. உன் கருணையால் உணவினை வேகச்செய். பதமாக்கு. ருசிக்கச் செய்.“ உப்பிடம் இது போல அவள் பிரார்த்தனை செய்தாள். “கூடாமலும் குறையாமலும் துணையிருந்து சமைப்பதில் …

குறுங்கதை -12 இரண்டு பிரார்த்தனைகள் Read More »

குறுங்கதை-11 போர்வீரனின் சூரியன்.

யுத்தமுனையிலிருந்த இளம் போர்வீரன் ஒவ்வொரு நாளும் தனது மனைவியை, பிள்ளைகளை, தாயை, சொந்த வீட்டினை, வீட்டுச் சுவரில் ஓடியாடும் அணிலை, எப்போதாவது வந்து போகும் பச்சை கழுத்து புறாவை நினைவு கொண்டபடியே இருந்தான். சில வேளைகளில் அவன் நினைவில் வீட்டுப்பசுவின் கழுத்துமணி சப்தம் கூடக் கேட்கும். அடுப்பில் தாளிக்கும் மணம் கூட நாசியைத் தொடும். படியில் கிடந்த மனைவியின் செருப்பில் ஒட்டியிருந்த சேறு கூடத் துல்லியமாகத் தெரியும். இவ்வளவு ஏன் உறங்கும் குழந்தைகளின் சீரான மூச்சொலி கூட …

குறுங்கதை-11 போர்வீரனின் சூரியன். Read More »

குறுங்கதை-10 சண்டைச்சேவல்

அவனது சண்டைச்சேவல் தோற்றதேயில்லை. அவன் சேவலைச் சண்டைக்குப் பழகுவதற்கு  முன்பாக அது ஒரு சேவல் இல்லை என்பதை உணரச் செய்வான். இதற்காக அதிகாலையில் சேவல் தன்னை அறியாமல் கூவும் போது சிறிய மூங்கில் கழியால் அடித்து அது கூவுவதைக் கட்டுப்படுத்துவான். நாட்படச் சேவல் கூவுவதை நிறுத்திக் கொண்டுவிடும். பின்பு சேவலை இன்னொரு சேவலுடன் சண்டைக்குப் பழக்குவதற்குப் பதிலாகத் தண்ணீரை பீய்ச்சியடித்து சேவலை அதோடு சண்டையிடச் செய்வான். தண்ணீர் எந்தத் திசையிலிருந்து பீறிடும் எனத் தெரியாமலும் நனைந்து கண்ணை …

குறுங்கதை-10 சண்டைச்சேவல் Read More »

குறுங்கதை- 9 அம்மாவின் புத்தகம்

திருமணமாகி வந்த போது தனது வீட்டிலிருந்து அம்மா அந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்திருந்தாள். ஆப்த நாதரின் கதைகள் என்ற அந்தப் புத்தகத்தைத் தன் வாழ்நாள் முழுவதும் அம்மா படித்துக் கொண்டிருந்தாள். அட்டை கிழிந்து காகிதங்கள் பழுத்து உதிரும் நிலைக்கு புத்தகம் வந்தபோதும் அதை வாசிப்பதை நிறுத்தவில்லை. ஒரு புத்தகத்தை எத்தனை முறை படிக்க முடியும். அப்படி என்னதான் அப்புத்தகத்தில் இருக்கிறது. அம்மா புத்தகம் படிக்கும் போது அவள் முகத்தில் எத்தனையோ உணர்ச்சிகள் வெளிப்படும். வீட்டுவேலைகள் செய்து கொண்டிருக்கும் …

குறுங்கதை- 9 அம்மாவின் புத்தகம் Read More »

குறுங்கதை- 8 கனவின் நடனம்

அந்த நகரில் எல்லோரும் கனவில் நடனமாடினார்கள். விடிந்து எழுந்தவுடன் தாங்கள் கனவில் ஆடிய நடனத்தைப் பற்றி வெட்கத்துடன், பெருமிதத்துடன், கூச்சத்துடன் பகிர்ந்து கொண்டார்கள். ஒரு இளம் பெண் சொன்னாள். நான் “நீர்க்குமிழி வானில் பறப்பது போல நடனமாடினேன்“. ஒரு இளைஞன் சொன்னான் “பாய்ந்தோடும் குதிரையின் வேகம் போலிருந்தது எனது நடனம்“. ஒரு முதியவர் சொன்னார் “நதிக்கரையோர நாணலின் அசைவு போன்றிருந்தது எனது நடனம்“. வீட்டு வேலைக்காரப் பெண் சொன்னாள் “காற்றில் ஈரத்துணிகள் உலர்வது போலிருந்தது எனது ஆட்டம்“. …

குறுங்கதை- 8 கனவின் நடனம் Read More »

குறுங்கதை -7 சாலை ஓவியன்

சாலையில் கரித்துண்டுகளைக் கொண்டு ஓவியம் வரையும் ஒருவனிருந்தான். அவன் தினமும் பின்னிரவில் யாருமற்ற சாலையில் அமர்ந்தபடியே ஓவியம் வரைந்து கொண்டிருப்பான். மற்ற சாலை ஓவியர்களைப் போலக் கடவுள் உருவத்தை அவன் வரைவதில்லை. மாறாகத் தாயும் சேயுமாக இருவரை தான் வரைவான். ஒவ்வொரு நாளும் அந்தத் தாயின் முகம் மாறிக் கொண்டேயிருக்கும். சில சமயம் அந்த முகத்தில் தூய மகிழ்ச்சி ததும்பும். சில வேளை சோகம் படிந்ததாகக் காணப்படும். பெரும்பான்மை நேரம் வெறித்த பார்வை கொண்ட முகமாகயிருக்கும். ஆனால் …

குறுங்கதை -7 சாலை ஓவியன் Read More »

குறுங்கதை -6 பச்சைக் காதுள்ள முயல்

மலையடிவாரத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு மருதன் எப்போதும் வேங்கை மரத்தடியில் உட்கார்ந்து கொள்வான். மேகங்கள் கடந்து போவதை வேடிக்கை பார்ப்பது தான் அவனது பொழுதுபோக்கு. சில நேரங்களில் ஆடுகளுடன் பேசிக் கொண்டிருப்பான். மருதனுக்கென யாருமில்லை. இந்த ஆடுகளும் கூட அவனுக்குச் சொந்தமானவையில்லை. நல்லான் குடும்பத்துக்குச் சொந்தமான ஆடுகளை மேய்ப்பவனாக இருந்தான். தான் எதற்காக வாழ்கிறோம். ஏன் தன்னை வாழ்க்கை இப்படியிருக்கிறது எனச் சில நேரம் சலித்துக் கொள்வான். ஆனால் இதிலிருந்து விடுபட அவனுக்கு வழிதெரியவில்லை ஒரு நாள் …

குறுங்கதை -6 பச்சைக் காதுள்ள முயல் Read More »