குறுங்கதை 121 புத்தனின் நினைவு
நீண்ட காலத்தின் பிறகு கபிலவஸ்து திரும்பும் புத்தரை வரவேற்க நகரே விழாக் கோலம் பூண்டிருந்தது. அரண்மனையில் யசோதா காத்துக் கொண்டிருந்தாள். தந்தையின் முகம் காண ராகுலனும் ஆசையுடனிருந்தான். ஞானம் பெற்ற புத்தருக்குக் கடந்த காலத்தின் நினைவுகளிருக்காது. அவரை யாரும் உரிமை கொண்டாட முடியாது என்றார்கள். இயற்கைக்கு மட்டும் தான் கடந்த கால நினைவுகள் கிடையாது. கௌதம புத்தர் தனது சீடர்களுடன் வருகை புரிந்தார். மக்கள் மலர் தூவி வரவேற்பு செய்தார்கள். வணிகர்கள் பொற்குவியல்களை அவரது காலடியில் கொட்டினார்கள். …