குறும்படம்

பறக்கும் புத்தகங்கள்

ஆஸ்கார் விருது பெற்ற குறும்படமான THE FANTASTIC FLYING BOOKS OF MR. MORRIS LESSMORE பார்த்தேன். புத்தகங்களின் முக்கியத்துவத்தை இதைவிடச் சிறப்பாக யாரும் சொல்லிவிட முடியாது. இணையத்தில் இந்தப்படம் காணக்கிடைக்கிறது. குழந்தைகள் பெரியவர் என அனைவரும் இந்தக் குறும்படத்தைக் காண வேண்டும். படத்தின் துவக்கத்தில் புத்தகத்தை நேசிக்கும் திரு. மோரிஸ் லெஸ்மோர் ஒரு ஹோட்டலின் பால்கனியில் அமர்ந்திருக்கிறார். அவருக்குப் புத்தகங்கள் தான் உலகம். சொற்கள் தான் துணை. ஒவ்வொரு நாளும் தனது வாழ்க்கை நிகழ்வுகளை அவர் …

பறக்கும் புத்தகங்கள் Read More »

பவா கதை சொல்கிறார்

பவா செல்லத்துரை என்றொரு கதைசொல்லி ஆவணப்படத்தைப் பார்த்தேன் ,பவாவோடு இருபது ஆண்டுகளுக்கும் மேல் நெருங்கிப் பழகியவன் என்ற முறையில் படம் பார்க்கும் போது, அவர் கூடவே இருந்து கதை கேட்பது போல இயல்பாக, நேர்த்தியாக, உணர்ச்சிபூர்வமாக இப்படம் உருவாக்கபட்டுள்ளது, சிறந்த கவிஞர், சிறுகதை ஆசிரியர், பேச்சாளர், கதை சொல்லி, இலக்கிய இரவுகளை உருவாக்கியவர், முற்றம், டயலாக் போன்ற இலக்கிய அமைப்புகளை உருவாக்கி நடத்திவருபவர், பதிப்பாளர் எனப் பன்முகங்கள் கொண்டவர் பவா செல்லத்துரை இந்த ஆவணப்படம் பவாவின் கதை …

பவா கதை சொல்கிறார் Read More »

லூயி மாலின் மதராஸ்

பிரெஞ்சுசினிமா இயக்குனரான லூயிமால் (Louis Malle) இந்தியா பற்றி ஆறு மணி நேரம் ஒடக்கூடிய விரிவான ஆவணப்படம் ஒன்றினை இயக்கியிருக்கிறார், 1969 ஆண்டு வெளியான Phantom India என்ற இந்த ஆவணப்படத்தின் ஒரு பகுதியாக தமிழகக் கலைகள் மற்றும் வாழ்க்கை முறை பற்றி நுண்மையாகப் பதிவு செய்திருக்கிறார் “Things Seen in Madras” என்ற ஐம்பது நிமிசங்கள் ஒடும் காட்சிகள் தமிழகம் குறித்த அரிய ஆவணப்பதிவுகளாகும், குறிப்பாக மயிலாப்பூர் கபாலிஸ்வரர் கோயிலின்  அறுபத்துமூவர் தேரோட்டம், சோவின் துக்ளக் நாடகத்தை …

லூயி மாலின் மதராஸ் Read More »

அறிவியல் குறும்படங்கள்

அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த சிறந்த உரைகள், விளக்கப்படங்கள் மற்றும் குறும்படங்களின் தொகுப்பு 1)      NATURE BY NUMBERS HTTP://YOUTU.BE/KKGEOWYOFOA 2)      MONA LISA — DA VINCI’S USE OF SACRED GEOMETRY HTTP://YOUTU.BE/JFTSAJZEQPW 3)      VILAYANUR RAMACHANDRAN: A JOURNEY TO THE CENTER OF YOUR MIND HTTP://YOUTU.BE/RL2LWNAUA-K 4)      PETER GREENAWAY’S DARWIN HTTP://YOUTU.BE/WXYOLTS_NK8 5)   N IS A NUMBER – A PORTRAIT OF PAUL ERDOS, HTTP://YOUTU.BE/FRQOD3HAQCM …

அறிவியல் குறும்படங்கள் Read More »

கலைஞனின் நாட்கள்

எனது கர்ணமோட்சம் குறும்படம் குறித்து பத்திரிக்கையாளர் கிராபியன் பிளாக் எழுதிய கட்டுரை. *** கலைஞனின் நாட்கள் – கிராபியன் பிளாக் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் கதை, வசனத்தில் உருவான “கர்ண மோட்சம்’ தமிழ் குறும்படச் சூழலில் மிக முக்கிய பதிவு. அதற்கு இக்குறும்படம் பெற்றிருக்கும் எண்ணற்ற விருதுகளே சான்று! உலகமயமாகிவிட்ட வாழ்க்கைச் சூழலில் பொருளாதரமற்ற கலைஞனின் நாட்கள், போரின் நாட்களை விடவும் மோசமானவை. அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதற்கே பெரும்பாடாய் போன இச்சமூகத்தில் கலைஞனின் இருப்பு அரிய பொக்கிஷம்தான். ஒவ்வொரு …

கலைஞனின் நாட்கள் Read More »

சில ஆவணப்படங்களும் நானும்

ஆவணப்படங்களுக்கு (DOCUMENTARY) எழுத்தாளராகயிருப்பது என்பது ஒரு புதிரான வேலை. பெரும்பாலும் அது ஆய்வுப்பணியாகவே இருக்கும். ஆனால் ஆய்வுவிபரங்களில் சிறு பகுதி கூட முறையாக படத்தில் பயன்படுத்தபட மாட்டாது. பெரும்பான்மையான ஆவணப்பட இயக்குனர்கள் நேர்காணல் எடுப்பதையே தங்களது படத்தின் பிரதானப் பகுதியாகக் கொண்டுவிடுகிறார்கள். இதற்கு உறுதுணை செய்வது போல கொஞ்சம் ஆய்வுக் குறிப்புகள். சுவாரஸ்யமான தகவல்கள் இருந்தால் போதுமானது என்றே நினைக்கிறார்கள். தமிழில் விவரணப்படங்கள் என்றாலே புலனாய்வு பத்திரிக்கையாளர்களின் வேலையைப் போல ஏதோ அதிர்ச்சி தரக்கூடிய, அறியப்படாத தகவல்கள் …

சில ஆவணப்படங்களும் நானும் Read More »

இந்தவாரக் குறும்படம்

கடலும் கிழவனும் ஹெமிங்வேயின் புகழ்பெற்ற கடலும் கிழவனும் நாவல் மிகச்சிறப்பாக அனிமேஷனில் உருவாக்கப்பட்டிருக்கிறது, இதனை உருவாக்க அலெக்சாண்டியர் பெத்ரோவ் என்ற ஒவியரும் அவரும் மகனும் இரண்டு ஆண்டுகாலம் எடுத்துக் கொண்டார்கள், 29000 சித்திரங்களை கையாலே கண்ணாடியில் வரைந்து உருவாக்கியிருக்கிறார்கள், இப்படம் சிறந்த அனிமேஷன் படத்திற்காக அகாதமி விருது பெற்றிருக்கிறது https://video.google.com/videoplay?docid=-6079824527240248060&hl=en# கவிஞனின் ரத்தம் 1930ம் ஆண்டு பிரபல பிரெஞ்சுக் கவிஞரும் ஒவியருமான ழான் காக்தூ இயக்கிய The Blood of a Poet  என்ற திரைப்படம் வெளியானது, …

இந்தவாரக் குறும்படம் Read More »

சில குறும்படங்கள்

  சமீபமாக இணையத்தில் நான் பார்த்த சில குறும்படங்கள் மற்றும் ஆணவப்படங்களின் இணைப்பு. காந்தியைப் பற்றிய ஆவணப்படம் காந்தியின் வாழ்க்கைவரலாறு குறித்த ஒரிஜினல் படக்காட்சிகளுடன் கூடிய அரிய காணொளி MAHATMA – Life of Gandhi https://www.youtube.com/watch?v=QCI3nswuYyc சதத் ஹசன் மண்டோ பற்றிய காணொளி இந்தியாவின் மிக முக்கிய உருது எழுத்தாளரான சதத் ஹசன் மண்டோ பற்றிய காணொளி, இவரது கதைகளின் பாதிப்பில் இருந்து தான் கமலஹாசனின் ஹேராம் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது, இந்தியப்பிரிவினை குறித்து எழுதிய அற்புதமான …

சில குறும்படங்கள் Read More »

இரண்டு குறும்படங்கள்.

அமெரிக்க இயக்குனரான ராமின் பஹ்ரானியின் (Ramin Bahrani)பிளாஸ்டிக் பேக் என்ற குறும்படம் பதினெட்டு நிமிசங்கள் ஒடக்ககூடியது. இந்தப் படத்திற்கு பின்னணி குரல் கொடுத்திருப்பவர் பிரபல இயக்குனர் வெர்னர் ஹெர்சாக். ஒரு பெண் கடையில் பொருள்கள் வாங்குகிறாள். அதை ஒரு பிளாஸ்டிக் கேரிபேக்கில் போட்டுத் தருகிறார்கள். அங்கிருந்து அந்த பிளாஸ்டிக் பேக் எங்கு செல்கிறது. எதை எல்லாம் சந்திக்கிறது என்று  அதன் முடிவில்லாத பயணமே இந்தக் குறும்படம். பல நேரங்களில் பிளாஸ்டிக் என்பது இன்றைய வணிகச் சந்தையின் குறியீடு …

இரண்டு குறும்படங்கள். Read More »